நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து - 2 பேர் பரிதாப பலி
கள்ளக்குறிச்சி: கள்ளக் குறிச்சியில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் ஒன்று மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
சேலம் அயோத்தியா பட்டினத்தை சேர்ந்தவர் பாபு. இவர் நாகர்கோவிலில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவர் தனது மனைவி அனுசுயா மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் காரில், சென்னையில் சூப்பர் மார்க்கெட்டில் மேனேஜராக பணிபுரிந்து வரும் தனது நண்பர் அரவிந்தனை சந்திக்க சென்னை சென்றார்.

பின்னர் நேற்று இரவு ஊர் திரும்பிக்கொண்டு இருந்தனர். இவர்களுடன் காரில் அரவிந்தனும், அயோத்தியா பட்டினத்துக்கு வந்தார். காரை அரவிந்தனே ஓட்டி வந்தார். காரின் முன் இருக்கையில் அனுசுயாவும், பின் இருக்கையில் பாபுவும், அவரது குழந்தைகளும் அமர்ந்து வந்தனர்.
இன்று அதிகாலை 3.30 மணி அளவில் கள்ளக்குறிச்சி அருகே கணியாமூர் என்ற இடத்தில் வந்த போது அங்கு சாலை யோரம் நின்றிருந்த டேங்கர் லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில், காரை ஓட்டி வந்த அரவிந்தனும், அனுசுயாவும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்து போனார்கள். பாபுவும், அவரது 2 குழந்தைகளும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் சிகிச்சைக்காக கள்ளக் குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேலு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications