வெள்ளத்தில் கார்கள் மூழ்காமல் இருக்க வேளச்சேரி காரங்க என்ன செய்றாங்க தெரியுமா?
2015ஆம் ஆண்டு வெள்ளத்தில் வாகனங்கள் மூழ்கியது போல இந்த ஆண்டும் நடக்காமல் இருக்க கார்களை பாலத்தின் மீது நிறுத்தியுள்ளனர்.
Recommended Video

சென்னை: மழை வெள்ளத்தில் கார்கள் மூழ்கிவிடாமல் இருக்க வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கக்கூடியவர்கள் தங்கள் கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த பெருமழை வெள்ளத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமானது. கார்கள், இருசக்க வாகனங்கள் நீரில் மூழ்கி பயனற்று போனது.
இந்த அடியிலிருந்து வாகன உரிமையாளர்கள் மட்டுமல்ல, சர்வீஸ சென்டர்களும் கூட பெரும் பாடு பட்டன. மீண்டு வர முடியாமல மூடப்பட்ட சர்வீஸ் சென்டர்கள் ஏராளம்.

முதல் சில நாட்களிலேயே வெள்ளம்
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நாள் முதலே பல பகுதிகள் நீரில் மிதக்கின்றன. கனமழையால் வேளச்சேரிக்கு செல்லக்கூடிய ஓடை நிரம்பி வருகிறது. இன்னும் கனமழை இங்கு பெய்யத் தொடங்கினால் இந்த ஓடை நிரம்பி வீடுகளுக்குள் புகும் அபாயம் உள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி குடியிருப்பாளர்கள் தங்கள் கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தியிருக்கிறார்கள்.

பாலத்தில் கார் பார்க்கிங்
விலை உயர்ந்த கார்கள் அனைத்தும் நீரில் மூழ்கிவிடக்கூடாது என்பதற்காகவும், நீரில் மூழ்கினால் மீண்டும் மறு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த முடியாது என்ற காரணத்திற்காகவும் இந்த கார்களை மேம்பாலத்தின் மேல் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். நேற்று மாலையில் இருந்து தற்போது வரை சுமார் 50க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

கார்களுக்கும் ரெயின் கோட்
மனிதர்களுக்கு ரெயின் கோட் இருப்பது போல கார்களுக்கும் ரெயின் கோட் இருக்கிறது. பல லட்சம் செலவு செய்து கார் வாங்கியவர்கள், கார்களை பாதுகாக்க சில ஆயிரங்கள் செலவு செய்து இந்த கோட் வாங்கலாம் என்பதே வாகன விற்பனையாளர்களின் பரிந்துரை.

கார்களைக் காக்கும் ஃபிளட் கார்ட்
‘ஃபிளட் கார்டு' என்று குறிப்படும் இந்த சாதனம் மழைக்காலங்களில் கார்கள் பாதிப்பை சந்திக்காமல் இருப்பதற்கான நிரந்தர தீர்வாக அமைகிறது. சிறிய டூஃபல் பேக் போல இருக்கும் இந்த பாதுகாப்பு கவரை, பெருமழைக்காலங்களில் காரின் மீது போர்த்தி விட்டால்போதும். பிறகு கீழே தொங்கும் கயிறுகளை இழுத்து காரின் மேற்புறத்தில் கட்டவேண்டும். மழைக்காலங்களில் மழை நீர் அதிகரித்து உங்களது காரை மூழ்கடிக்கும் கதிக்கு வந்தால், இந்த ஃபிளட் கார்டு காரை மூழ்காமல் பாதுகாக்கும்.
(ஃபிளட் கார்டு பற்றி மேற்கொண்டு படிக்க)
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications