சென்னையில் சட்ட விரோத கார் பந்தயம்.. 150 கி.மீயில் சீறிப்பாய்ந்த சொகுசு கார்கள்.. போலீஸ்காரர் காயம்!
சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில், கார் பந்தயத்தில் ஈடுபட்டு அதிகவேகமாகச் சென்றதாக 9 சொகுசு கார்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந்த சட்டவிரோத கார் ரேஸைத் தடுக்க முயன்ற இன்ஸ்பெக்டரின் கால் மீது காரை ஏற்றிச் சென்றுள்ளனர் இந்த கொடுமைக்காரர்கள். இதுதொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
கானத்தூர் அருகே போலீஸார் நேற்று நள்ளிரவில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 150 கி.மீ மின்னல் வேகத்தில் 20க்கும் சொகுசு கார்கள் சீறி பாய்ந்து வந்து கொண்டிருந்தன.

சீறிப் பறந்த கார்கள்
போலீஸார் அவற்றை தடுத்து நிறுத்த முயன்றபோது அவை நிற்காமல் வேகமாகச் சென்றன. அப்போது ஒரு கார் கானத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சௌந்திரராஜனின் கால் மீது உரசிவிட்டு சென்றது.

உத்தண்டியில் பிடிபட்ட 9 கார்கள்
தகவலறிந்த உத்தண்டி போலீஸார் 9 கார்களை மடக்கிப் பிடித்தனர். எனினும் மேலும் 6 கார்கள் நிற்காமல் சென்றுவிட்டன. இதையடுத்து, கானத்தூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து கார் உரிமையாளர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

விஐபிகளின் மகன்கள்
நடத்திய விசாரணையில், அவர்கள் புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களின் மகன்கள் என்பது தெரியவந்தது.

காலில் காரை ஏற்றியவர் கைது
இந்த நிலையில், ஆய்வாளரின் காலில் ஏற்றிவிட்டு காரை நிறுத்தாமல் சென்றதாக காரை ஓட்டிய ராகவ்கிருஷ்ணாவை போலீஸார் கைது செய்தனர்.

பல கோடி மதிப்பிலான கார்கள்
கைப்பற்றப்பட்ட லம்போர்கினி, பென்ஸ் உள்ளிட்ட விலை உயர்ந்த கார்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.30 கோடி இருக்கும் என்று தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications