ஐன்ஸ்டீன் மின் கேட்... காற்றில் ஒடும் கார்... நெல்லை மாணவர்கள் சாதனை!
நெல்லை: நெல்லை அருகே கல்லூரி மாணவர்கள் காற்றில் ஓடும் காரை உருவாக்கியுள்ளனர். இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
நெல்லை மாவட்டம் ஆலங்குலத்தில் உள்ள ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் இயந்தரவியல் துறை நான்காம் ஆண்டை சேர்ந்த மாணவர்கள் காற்றில் இயங்கும் காரை வடிவமைத்துள்ளனர். இந்த காரில் உள்ள இன்ஜின் பெட்ரோலுககு பதிலாக அழுத்தப்பட்ட காற்றினால் இயங்கக் கூடியது. இந்த கார் கல்லூரியின் 11வது ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் செய்முறை விளக்கம் கல்லூரி முதல்வர் ராமர், அறங்காவலர் எழில்வாணன், உதவி பேராசிரியர் சுரேஷ் முன்னிலையில் நடந்தது. இந்த காருக்கு ஐன்ஸ்டீன் மின் கேட் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இந்த கார் தயாரிப்புக்கு வழிகாட்டியாக இருந்த உதவி பேராசியர் சுரேஷ் மற்றும் வடிவமைத்த மாணவர்கள் கூறுகையில், ‘இந்த காரின் எடை மட்டும் 160 கிலோ ஆகும். இந்த காரை 100 கிலோ எடை வரையுள்ள நபர்கள் உட்கார்ந்து பயணம் செய்யலாம். அந்த வகையில் தயாரித்துள்ளோம். இந்த கார் 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல கூடியது.
தற்போது உலகத்தில் கச்சா எண்ணை தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு விலை உயர்ந்து வருகிறது. இதனால் இந்த கார் கச்சா எண்ணை எரிபொருளுக்கு மாற்றாக அமையும். அழுத்தப்பட்ட காற்று எளிதில் எங்கும் எளிதாக கிடைப்பதால் எரிபொருள் தட்டுபாடு இருக்காது. இதனால் சுற்று சூழலும பாதிக்கப்படாது' எனத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications