கார் திடீரென பஞ்சர்.. தொண்டரின் காரில் விமான நிலையம் சென்ற ஸ்டாலின்
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் கார் திடீரென பஞ்சர் ஆனதால் தொண்டர் ஒருவரின் காரில் விமான நிலையம் சென்றார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்வதற்காக தனது வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு காரில் புறப்பட்டார் ஸ்டாலின். மீனம்பாக்கம் விமான நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த அவரது கார், ஆலந்தூர் கத்திப்பாரா பாலம் அருகே திடீரென 'பஞ்சர்' ஆனது. இதனால் காரை தொடர்ந்து ஓட்ட முடியாது என டிரைவர் கூறினார். உடனே காரில் இருந்து மு.க.ஸ்டாலின் கீழே இறங்கினார். அவரை பாதுகாப்பு படையினர் சூழ்ந்து கொண்டனர்.

இதையடுத்து மு.க.ஸ்டாலின், அவருக்கு பின்னால் வந்த தி.மு.க. தொண்டர் ஒருவரின் காரில் ஏறி விமான நிலையத்துக்கு சென்றார்.
சென்னை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினை பேட்டி எடுக்க செய்தியாளர்கள் காத்திருந்தனர். ஆனால் விமானத்துக்கு நேரம் ஆனதால் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி எதுவும் தராமல் அவசரமாக சென்றுவிட்டார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications