களை கட்டியது பொங்கல்.. சீர்வரிசைக்கு கார், வேன்களைப் பிடிக்கும் மக்கள்.... கடும் கிராக்கி!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பொங்கல் களை கட்டியுள்ளது. பொங்கல் சீர் வரிசைகளை கொண்டு செல்ல பலர் கடுமையாக முட்டி மோதுவதால் வேன், கார்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை நாளை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனால் தென் மாவட்டங்களில் பொங்கல் பண்டிகை களை கட்ட தொடங்கி விட்டது.

Cars and Vans are in big demand due to Pongal rush

பத்து நாட்களுக்கு முன்பாகவே பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து வர்ணம் பூசி பொலிவுபடுத்துவர். உழவர்களை கவுரப்படுத்தும் விதமாக அவர்கள் விளைவித்த காய்கறிகள், அரிசிகளை வாங்க சந்தையில் பொது மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

நெலலை மாவட்டத்தில் வள்ளியூர், ஆலங்குளம், பாவூர்சததிரம், தென்காசி, சேரன்மகாதேவி உளளிட்ட பகுதிகளில் பொங்கலுக்கு தேவையான காய்கறிகள், கிழங்கு வகைகள், கரும்பு, பனங்கிழங்கு, மஞ்சள் குலை உள்ளிட்டவைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து கரும்புகள் நெலலையில் குவிந்துள்ளன. 15 கரும்பு கொண்ட ஒரு கட்டு ரூ.350ல் இருந்து ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு கரும்பு விலை ரூ.5 அதிகரித்துள்ளது.

மஞ்சள் குலை ஒன்று ரூ.15ல் இருந்து ரு.20 வரையும், வாழை இலை கட்டு ரூ.20க்கும், பனங்கிழங்கு ரூ.30 முதல் ரூ.50 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

பொங்கல் சீர்வரிசை பொருட்களை மாப்பிளை வீட்டுக்கு கொண்டு செல்ல பலர் வாடகை கார்களை பிடித்து வருவதால், அவற்றுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+