கபாலி : உலகம் ஒருவனுக்கா... பாடலை தடை செய்யுங்க - மதுரை ஹைகோர்ட் கிளையில் மனு
சென்னை: கபாலி படத்தில் இடம்பெற்றுள்ள 'உலகம் ஒருவனுக்கா'... பாடலுக்கு தடை விதிக்கக் கோரி நேதாஜி சுபாஷ் சேனா அமைப்பு சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் கபாலி. நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இந்தப் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்தப் படம் இடம் பெற்றுள்ள உலகம் ஒருவனுக்கா... என்ற பாடலை கபிலன் எழுதியுள்ளார்.

பாடலில் இடம்பெறும் தமிழ் ராப் வரிகளை விவேக் எழுதியுள்ளார். அனந்து, சந்தோஷ் நாராயணன், கானா பாலா ஆகியோர் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். இந்த பாடலின் வரிகள் சில சர்ச்சைக்குரியதாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
வா வா நீ வா தொழ
உலகம் ஒருவனுக்கா
உழைப்பவன் யார்?
விடை தருவான் கபாலி தான்
கழகம் செய்து ஆண்டவரின்
கதை முடிப்பான்
உலகம் ஒருவனுக்கா
உழைப்பவன் யார்?
விடை தருவான் கபாலி தான்
கழகம் செய்து ஆண்டவரின்
கதை முடிப்பான்
மேட்டுக்குடியின் கூப்பாடு
இனி நாட்டுக்குள்ள கேக்காது
இன முகவரி அது இனி
விழி திறந்திடுமே
ஆகிய வரிகள்தான் சர்ச்சைக்குறிய வரிகளாக கூறப்படுகிறது. பாடலில் வரும் வரிகள் தேவையற்ற சாதிய மோதல்களுக்கு வழிவகுக்கும் வகையில் இருப்பதால் சம்பந்தப்பட்ட இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மனு தாக்கல் செய்த வி.மகாராஜன் என்பவர் கோரியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications