இதிகாசத்தை இழிவுபடுத்தினாரா கமல்.. கோர்ட்டில் வழக்கு
இதிகாசத்தை இழிவுபடுத்தியதாகக் கூறி திரைப்பட நடிகர் கமலஹாசன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
திருநெல்வேலி: இதிகாசத்தை இழிவுப்படுத்தி பேசியதாக கோர்ட்டில் கமல் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதால் அவர் அதிர்ச்சியில் உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்தவர் ஆதிநாதசுந்தரம். இவர் வியாபாரிகள் சங்கத் தலைவராக உள்ளார். அங்குள்ள நாறும்பூதநாதர் சுவாமி கோயில் பக்தர்கள் சங்க செயலாளராகவும் உள்ளார்.

இவர் வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் நடிகர் கமல் கடந்த 12ம் தேதி தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான நிலை அதிகரித்து வருவது குறித்த கேள்விக்கு மகாபாரதத்தில் பெண்களை வைத்து சூதாடுவதை படிச்சிக்கிட்டு இருக்கின்ற ஊர் இது. அதனால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று தெரிவித்தார்.
கமலின் இந்த கருத்து மகாபாரதத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. தன்னை கடவுள் மறுப்பு கொள்கையுடையவராக காட்டி கொள்ளும் கமல் இது போன்று பேசுவது கண்டிக்கத்தக்கது. எனவே, அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிபதி செந்தில்குமார் இது பற்றி பழவூர் போலீசார் உரிய விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இந்த மனுவால் கமல் வட்டாரம் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications