வேந்தர் மூவிஸ் மதன் மீது புதிய மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
வேந்தர் மூவிஸ் மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் புதிய மோசடி வழக்கை பதிவு செய்துள்ளது.
சென்னை: மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கு விநியோகஸ்தர் உரிமை வழங்குவதாக கூறி ரூ.11 கோடி மோசடி செய்ததாக வேந்தர் மூவிஸ் மதன் மீது புதிய மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல வேந்தர் மூவிஸ் பட நிறுவனத்தை நடத்தி வந்தவர் மதன். இந் நிறுவனத்தின் சார்பில் இதுவரை 15 திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளியிட்டுள்ளார். பாயும் புலி உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்தார்.

அந்தவகையில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தை வேந்தர் மூவிஸ் அதிபர் மதனும், 'சூப்பர் குட்ஸ்' படநிறுவன அதிபர் ஆர்.பி.சவுத்ரியும் இணைந்து தயாரித்தனர். இதனிடையே பணமோசடி வழக்கில் மதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ், படஅதிபர் ஆர்.பி.சவுத்ரி உள்பட திரையுலக பிரமுகர்கள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து புகார் அளித்தனர். இந்நிலையில் மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கு விநியோகஸ்தர் உரிமை வழங்குவதாக கூறி ரூ.11 கோடி மோசடி செய்ததாக திரைப்பட விநியோகஸ்தர் சிவபாலன் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் மதன் மீது வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications