காக்கா முட்டை மீது வக்கீல்கள் வழக்கு: தனுஷ் ஆஜராக கோர்ட் உத்தரவு
காக்கா முட்டை படத்தில் வழக்கறிஞர்கள் இழிவாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான தனுஷ்-வெற்றிமாறன், இயக்குநர் மணிகண்டன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ஆகஸ்ட் 6ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காக்கா முட்டை திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. தனுஷ் - வெற்றி மாறன் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை மணிகண்டன் இயக்கியுள்ளார். தேசிய விருது பெற்றுள்ள இந்த படம் அனைத்து தரப்பு மக்களிடமும் பாராட்டுகளை பெற்றதோடு நல்ல விமர்சனங்களையும் பெற்றது.

காக்கா முட்டை படத்தில், வழக்கறிஞர் தொழிலை இழிவுப்படுத்தும் விதமாக வசனங்கள் இடம்பெற்றுள்ளதால் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் மணிவண்ணன், சென்னை எழும்பூர் பெருநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி முருகன், காக்கா முட்டை திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான தனுஷ்-வெற்றிமாறன், இயக்குநர் மணிகண்டன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ஆகஸ்ட் 6ம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications