அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரும் மு.க. ஸ்டாலின் வழக்கு- ஆக. 30-க்கு ஒத்திவைப்பு
மதுரை: முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மு.க. ஸ்டாலின் சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் நீதிபதி 30 தேதிக்கு வழக்கைத் தள்ளி வைத்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு திமுக சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின், தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசியதாக புகார் எழுந்ததையடுத்து, திண்டுக்கல் மாவட்ட அரசு வழக்கறிஞர், ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஐகோட்டின் மதுரை கிளையில் மு.க. ஸ்டாலின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது, மு.க. ஸ்டாலின் சார்பில் வழக்கறிஞர்கள் ரவி, மாணிக்கம் ஆகியோர் ஆஜரானார்கள்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலசுப்ரமணியன், இந்த வழக்கில் தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞர் ஆஜராகி வாதாட இருப்பதால் விசாரணையை தள்ளி வைக்குமாறு நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி விமலா வரும் 30ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications