சசிகலா புஷ்பாவை தொடர்ந்து பதவி பறிக்கப்பட்ட நாராயண பெருமாள் மீதும் பாய்கிறது வழக்குகள்?
சென்னை: சசிகலா புஷ்பாவுக்கு பின்புலமாக இருக்கும் தொழிலதிபர் வைகுண்டராஜனுடன் நெருக்கமாக இருந்ததால் அதிமுக அமைப்பு செயலராக இருந்த நாராயண பெருமாளின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அனேகமாக அவர் மீதும் சசிகலா புஷ்பாவைப் போல வழக்குகள் பாயக் கூடும் என தெரிகிறது.
ஜெயலலிதாவை எதிர்த்து மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார் ராஜ்யசபா எம்.பி.யான சசிகலா புஷ்பா. அவர் மீது பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முன்ஜாமீன் கோரி நீதிமன்றப் படிகளேறியிருக்கிறார். இதனிடையே சசிகலா புஷ்பாவை வளர்த்துவிட்ட அமைச்சர் சண்முகநாதனின் கட்சிப் பதவியை ஜெயலலிதா அதிரடியாகப் பறித்திருந்தார்.
இதற்குப் பின்னரும் சசிகலா புஷ்பாவின் தீவிர ஆதரவாளரான அதிமுக அமைப்புச் செயலர் நாராயண பெருமாள், தொழிலதிபர் வைகுண்டராஜன் வகையறாக்களுடன் மிக நெருக்கமான உறவை தொடர்ந்திருக்கிறார். நாராயணபெருமாளின் மகனின் திருமண வரவேற்பில் வைகுண்டராஜன் வகையறாக்கள் பங்கேற்க தடபுடலாக விருந்தளிக்கப்பட்டது.
இந்த விருந்து வைத்த மறுநாளே இன்று நாராயண பெருமாளின் அமைப்புச் செயலர் பதவி பறிக்கப்பட்டுவிட்டது. அனேகமாக சசிகலா புஷ்பாவை மிரட்டுவது போல நாராயணபெருமாள் மீது ஏகப்பட்ட வழக்குகள் போடப்படுவதற்கு சாத்தியமிருக்கின்றன என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
நாராயணா!
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications