எப்படியாவது ஒரு சீட்டு வாங்கி எம்.எல்.ஏ ஆகணும்.... கைமாறும் கோடிகள்...
சென்னை: எலக்சன் வரப்போகுதுல்ல... அரசியல் வானிலையில என்ன மாற்றம் வரப்போகுதுன்னு யாராலையும் சரியா கணிக்க முடியலப்பா. எனக்கு காத்து வாத்துல வந்து காதுல வந்து விழுந்த செய்தியை சொல்றேன் கேட்டுக்கங்க.
கூட்டணி யார் கூடன்னு இன்னமும் முடிவு செய்யலைன்னாலும் அந்த பெரிய கட்சியில சீட்டு வாங்க ஆள் ஆளுக்கு போட்டி போடுறாங்க. எப்படியும் ஜெயிச்சு சட்டசபைக்குள்ள காலடி எடுத்து வச்சிருவோம்கிற நம்பிக்கைதான்.

யாரை புடிச்சா சீட்டு வாங்கலாம்னு விடிய விடிய யோசிச்சு, எந்த சந்துல புகுந்தா எப்படி வரலாம்னு மூளையை தட்டிப்பார்த்து கடைசியில அவங்கதான் இதற்கு சரிப்பட்டு வருவாங்கன்னு மூட்டை மூட்டையா பணத்தோட டேரா போட்டுருக்காங்க கட்சிக்காரங்க.
இதுல மூலவருக்குத்தான் சீட் ஒதுக்கிற அதிகாரம் இருந்தாலும், உற்சவர், பரிகார தெய்வங்களுக்கும் சீட் கோட்டா இருக்கிறதால அவங்களை பிடிச்சா கண்டிப்பா நமக்கு வாய்ப்பு கிடைக்கும்னு நம்பி சில 'சி'க்களை கொடுக்கவும் தயரா இருக்காங்கலாம்.
சென்னையில பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டல்ல ரூம் போட்டு இருக்கிறதால அந்த இடங்கள்ல கரை வேட்டிகள் கூட்டமாத்தான் இருக்கு. பகல்ல பார்த்தா முதலுக்கே மோசமாயிரும்னு சொல்லி, ராத்திரியிலதான ரகசியமாக சந்திச்சுக்கிறாங்களாம். மொத்தம் 5 டீம் தனித்தனியா அவங்கவங்க கோட்டாவுக்கு ஏத்த மாதிரி பேசிக்கிட்டு இருக்காங்களாம்.
2011ல நடந்த எலக்சன்ல உற்சவர், பரிவார தெய்வங்கள் சிபாரிசு செஞ்சவங்களுக்குத்தான் சீட் கிடைச்சது. அதனால இந்த எலக்சன்லயும் அவங்க சொன்னவங்களுக்குத்தான் சீட் கிடைக்கும் நம்புறாங்க. அதனால விருப்பமனு போட்ட கையோட சென்னையில் நல்ல ஸ்டார் ஹோட்டலா போட்டு டேரா போட்டுட்டு பரிவார தெய்வங்களுக்கு பணிவிடை செய்ய ஆரம்பிச்சிட்டாங்களாம்.
இது ஒரு பக்கம் இருக்க... ரகசிய துறை ஆட்கள் சொல்றதைத்தான் மூலவர் கேட்பாரு என்கிறதால அந்த லிஸ்ட்லையும் பேரு வரணும்னு கவனிக்க வேண்டியவங்களை கவனிக்கிற விதமா கவனிச்சிட்டு வர்றாங்களாம் சொல்லிக்கிட்டாங்க.
தேர்தல்ல போட்டியிடுற வேட்பாளர்களுக்கு தேர்தல் நிதி என்ற பெயரில் கட்சியில இருந்தும் தொகுதிக்கு 2 சி வரை வெயிட்டா கவனிப்பாங்கன்னு தெரிஞ்சதால எப்படியும் போட்ட காச எப்படியும் அறுவடை பண்ணிறலாம்னு இப்பவே விதைக்க ஆரம்பிச்சிட்டாங்க.
நீங்க அப்படி போன நான் இப்படி வருவேன்னு சொல்லி... ஒரு தனியார் ஏஜென்சி ஆட்களை பிடிச்சி ரகசிய சர்வே எடுத்து லிஸ்ட் ரெடி பண்ண சொல்லிட்டாங்களாம் மூலவர். அப்போ இந்த தடவை யார் ரெடி பண்ண லிஸ்ட் வெளியில வரப்போகுதோ... அதுல யார் யார் பேரு இருக்கப் போகுதோன்னு இப்பவே கவலைப்பட ஆரம்பிச்சிட்டாங்க.
கூடாவே தங்கத்தேர் இழுக்கிறது... பால் குடம் எடுக்கிறதுன்னு கோவில் கோவிலா பூஜையும் செய்ய ஆரம்பிச்சிட்டாங்களாம்.
இன்னைக்கு இவ்வளவுதான்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications