ஜாதிவாரி கணக்கெடுப்பு: நிதியே ஒதுக்கலை- எப்போ நடக்கும்? எல்லாம் ஏமாற்று வேலை:பத்திரிகையாளர் ப்ரியன்
சென்னை: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு திடீரென ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அறிவித்திருப்பது என்பது பீகார் தேர்தலுக்கான ஏமாற்று வேலை; ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக மட்டும் அறிவித்த மத்திய அரசு,அதற்கான நிதியும் ஒதுக்கவில்லை; எப்போது இது நடத்தப்படும் என்பதையும் தெரிவிக்கவில்லை என கடுமையாக விமர்சித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
ஒன் இந்தியா தமிழுக்கு மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் அளித்த பேட்டி: மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவை வரவேற்கிறேன். ஆனால் இதற்கு பின்னால் சில குழப்பங்கள் இருக்கின்றன. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஒன்றுதான் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது.

ராகுல் காந்தியின் தொடர் போராட்டம்
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவோம் என்பது ராகுல் காந்தியின் வாக்குறுதி. மாநிலங்களின் சட்டசபை தேர்தல் பிரசாரங்களிலும் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வலியுறுத்தி பேசியவர் ராகுல் காந்தி.
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு கடும் எதிர்ப்பு
ஆனால் ராகுல் காந்தி, ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வலியுறுத்திய போது பாஜகதான் கடுமையாக விமர்சனம் செய்தது. பிரதமர் நரேந்திர மோடி போன்றவர்கள், ஜாதி ரீதியாக மக்களைப் பிரிக்கின்றனர் என்ற கோஷத்தை முன்வைத்தனர். ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு என்றைக்குமே பாஜக ஆதரவாக இருந்ததும் இல்லை.
எப்போதுதான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு?
தற்போது திடீரென, மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்கிறது பாஜக அரசு. மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடக்கும்? கொரோனா தொற்று காலம் என்பதால் 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 2026-ம் ஆண்டாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடக்குமா என்றால் அதற்கான நிதியையும் பாஜக அரசு ஒதுக்கவில்லை. ரூ.12,000 கோடி செலவாகக் கூடிய மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு வெறும் ரூ.524 கோடியைத்தான் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு கிடைத்த வெற்றி
மத்திய அரசின் இந்த அறிவிப்பு, தமிழ்நாடு அரசுக்குக் கிடைத்த வெற்றியாகும். தமிழ்நாட்டில் உள்ள சமூக நீதி பேசும் கட்சிகள், முதல்வர் ஸ்டாலினிடம், மாநில அரசுதான் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தின. ஆனால் முதல்வர் ஸ்டாலினோ, மத்திய அரசுதான் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்; அதுதான் சட்டப்பூர்வமாகவும் செல்லுபடியாகும் என தொடர்ந்து கூறி வந்தார். தற்போது முதல்வர் ஸ்டாலினின் நிலையை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பீகாரும் ஜாதிவாரி கணக்கெடுப்பும்
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு இன்னொரு காரணம், பீகார் மாநில சட்டசபை தேர்தல்தான். பீகாரில் ஏற்கனவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கேற்ப இடஒதுக்கீடும் செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றம் இதில் தலையிட்டு இந்த இடஒதுக்கீட்டை நிறுத்தி வைத்துவிட்டது. தற்போது பீகார் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பீகார் தேர்தலால்தான், கொள்கை ரீதியாகவே ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒப்புக் கொள்ளாத பாஜக, இப்போது வெளியிட்ட அறிவிப்பு மூலம் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
நிதியே ஒதுக்காமல் கணக்கெடுப்பா?
மத்திய அரசு, ஒவ்வொரு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தினால்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது சரியாக இருக்கும். மாநில அரசுகள் இந்த கணக்கெடுப்பை நடத்தினால் ஒரு சர்வேயாக மட்டும்தான் இருக்கும். ஆனால், மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கே நிதி ஒதுக்காத மத்திய அரசு தற்போது இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எப்போது நடைமுறைக்கு வருமாம்?
ஏற்கனவே பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டது. இது எப்போது நடைமுறைக்கு வரும்? மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தினால்தான் நடைமுறைக்கு வர முடியும். சரி.. இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது எப்போதுதான் நடத்தப்படும்? இதற்கான அறிவிப்பைதான் முதலில் மத்திய அரசு வெளியிட்டிருக்க வேண்டும். அந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு எப்போதுதான் நிதி ஒதுக்குவீர்கள்:? ஆகையால்தான், இந்த அறிவிப்பை பீகார் தேர்தலுக்கான ஒரு அறிவிப்பாக மட்டுமே பார்க்க முடியும். பீகார் தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுவதற்காக பாஜக முன்வைக்கிற யுக்தியாகும்.
ஒரே காரணம் பீகார் தேர்தல் மட்டும்தான்
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பேசிய பிரதமர், இந்துக்களின் செல்வத்தை முஸ்லிம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் என்றுதான் பேசினார். அப்படி எல்லாம் பேசிவிட்டு இப்போது திடீரென, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதன் காரணம் என்ன? ஒரே காரணம், பீகார் தேர்தல் மட்டும்தான்.
ஜாதிவாரி கணக்கெடுப்பும் இடஒதுக்கீடும்
ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதே இடஒதுக்கீட்டில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்குதான்.ஜாதிய அடிப்படையில் எந்தெந்த பிரிவினர் எவ்வளவு சதவீதம் என்பதை அறிந்து அதற்கேற்ப இடஒதுக்கீடு வழங்குவதுதான்.இதுதான் நியாயமானது. ஆனால் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப் போவதாக கூறும் மத்திய அரசு, அதற்கு அடுத்ததாக இடஒதுக்கீட்டில் மாற்றங்கள் கொண்டு வருமா என்பதும் தெரியாது. 2029-ம் ஆண்டு தேர்தலில் ஓட்டு வாங்குவதற்கு சில விஷயங்களை செய்வார்களா? எனவும் தெரியாது. இவ்வாறு மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications