மதிமுகவில் வெடித்த ஜாதி மோதல்- துரை வைகோவுக்கு வைகோவின் வலதுகரம் மல்லை சத்யா எதிர்ப்பு- பரபர தகவல்!
சென்னை: மறுமலர்ச்சி திமுகவில் வைகோவின் மகனும் முதன்மை செயலாளருமான துரை வைகோவுக்கு எதிராக ஜாதிய ரீதியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அக்கட்சி நிர்வாகிகளாலேயே கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்; துரை வைகோவுக்கு எதிரான கோஷ்டியை இப்படி தூண்டிவிடுவதே, வைகோவின் வலது கரமான மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாதான் என்று அக்கட்சியின் இணையதள அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மினர்வா ராஜேஸ் குற்றம் சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக மினர்வா ராஜேஸ் வெளியிட்ட அறிக்கை: மதிமுக முதன்மை செயலாளர் அண்ணன் துரை வைகோ அவர்கள் 5 வருடங்களுக்கு முன்பு நேரடி அரசியலுக்கு வந்தார். தொண்டர்கள் & நிர்வாகிகள் அவரை கட்டாயப்படுத்தி இந்த இயக்கத்தை உயிர்ப்புடன் கொண்டு செல்வதற்காக, அவருக்கு விருப்பம் இல்லை என்று மறுத்தும் கட்டாயப்படுத்தி அழைத்து வந்து விட்டனர்.

கடந்த 30 ஆண்டுகளாக நேரடியாக எந்த பொறுப்பிலும் இல்லாவிட்டாலும் இயக்க தந்தை வைகோ அவர்களுக்காக எங்களால் முடிந்த உழைப்பை கொடுத்து கொண்டு இருந்த என்னை போன்றோர் அண்ணன் துரை வைகோ அவர்களுக்காக நேரடி அரசியலுக்கு வந்தோம்.
அண்ணன் துரை வைகோ அவர்கள் இயக்கத்திற்குள் வந்ததால் கட்சியின் அனைத்து தொண்டர்களும் மகிழ்ச்சியில் இருக்க, சிலருக்கு மட்டும் வேப்பங்காயாக கசந்தது. தலைவரை ஏமாற்றியது போல அண்ணன் துரைவைகோ அவர்களை ஏமாற்ற முடியவில்லை. தாங்கள் நினைத்தது போல அனைத்தையும் நடத்துவதற்கு முதன்மை செயலாளர் முட்டுகட்டையாக இருக்கிறாரே என்று எண்ணிய அந்த கும்பல் தொடர்ந்து சதி வேலைகளில் இறங்கியது.
பெண் ஆய்வாளர் கொலை வழக்கில் கைதான காஞ்சிபுரம் வளையாபதி அவர்கள் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் போது, அவரை தூண்டி விட்டு முதன்மை செயலாளருக்கு எதிராக பேச விட்டு ராஜினாமா நாடகத்தை நடத்தினார். இன்று வரை தலைவர் வைகோ அவர்களை மிக மோசமாக களங்கப்படுத்தி வரும் திருப்பூர் துரைசாமி உடன் இப்போது வரை தொடர்பில் உள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு பாஜகவுக்கு சென்ற தூத்துக்குடி தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் புதுக்கோட்டை செல்வம் கட்சியை விட்டு வெளியே போகும் முன்பும் சரி, இப்போது பாஜகவில் சேர்ந்த பின்பும் சரி அவருடன் தொடர்பில் இருக்கிறார்.
முதன்மை செயலாளரை சாதிய ரீதியாக மிக மோசமாக ஊடகங்களில் பேசி வரும் வல்லம் பசீரோடும் கூட்டு. இப்படியாக கட்சிக்கும், தலைவர் வைகோ முதன்மை செயலாளர் மீதும் களங்கத்தை ஏற்படுத்தி வரும் செயல்களில் பின் இருந்து இயக்கி வருகிறார் துணைப்பொது செயலாளர் மல்லை சத்யா அவர்கள். துரை வைகோவை எதிர்கிறேன் என்ற பெயரில் தலைவரை கட்சியை களங்கப்படுத்தி வருகிறார். அவர் இதோடு நிறுத்தி கொள்ள வேண்டும்.
இந்த இயக்கத்திற்கு துரோகம் ஒன்றும் புதிது அல்ல. இதே நிலையை நீங்கள் தொடர்ந்தால், உங்களின் மொத்த வண்டவாளத்தையும் பொதுவெளிக்கு கொண்டு வந்து தோலுரித்து அம்பலபடுத்துவோம்.
எங்களுக்கு இயக்கம் பெரிது. தலைவர் வைகோ பெரிது . முதன்மை செயலாளர் அண்ணன் துரை வைகோ பெரிது. இவர்களை களங்கபடுத்தி முதுகில் குத்த நினைத்தால் இனியும் பொறுத்து போக மாட்டோம். வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது இயக்கமாக இருக்கட்டும். இவ்வாறு மினர்வா ராஜேஸ் தெரிவித்துள்ளார்.
மதிமுகவில் என்ன நடந்தது?
மதிமுகவின் தொழிலாளர் முன்னணி பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய நிர்வாகிகள், தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் ஜாதிய அடிப்படையில் நியமிக்கப்படுவதாக துரை வைகோவை முன்வைத்து குற்றம் சாட்டினார். இதனால் கோபமடைந்த துரை வைகோ, அந்த பொதுக்குழுவை விட்டு வெளியேறினார். அப்போது, அண்ணே உங்களை விமர்சித்தால் வெட்டிவிட்டு ஜெயிலுக்கு போறேன் என ஒரு நிர்வாகி ஆவேசமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications