பூனைக்குட்டி இவ்வளவு சீக்கிரமாக வெளியில் வந்துவிட்டதே? யாரு யார சொல்றாங்கன்னு தெரியுதா மக்களே?
பூனைக்குட்டி இவ்வளவு சீக்கிரமாக வெளியில் வந்துவிட்டதே என பாமக நிறுவனர் ராமதாஸ் ஸ்டாலினின் கருத்துக்கு பதில் தெரிவித்துள்ளார்.
சென்னை: பூனைக்குட்டி இவ்வளவு சீக்கிரமாக வெளியில் வந்துவிட்டதே என பாமக நிறுவனர் ராமதாஸ், ஸ்டாலினின் கருத்துக்கு பதில் தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அணியாக எங்கள் அணி இருக்கும் என ஸ்டாலின் கூறியதை வைத்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அணியாக எங்கள் அணி இருக்கும் என ஸ்டாலின் கூறியதை வைத்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாள் முதலே தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என திமுகவினர் தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக உடைந்தது.
இதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தான் காரணம் என சசிகலா தரப்பு குற்றம்சாட்டியது. அதிமுகவை உடைத்து ஆட்சியை கலைக்கப் பார்க்கிறார் என்றும கூறினார்

ஸ்டாலினுடன் நெருக்கம்
முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் திமுகவுக்கு விலை போயிவிட்டதாகவும் அவர் ஸ்டாலினுடன் இணக்கமாக இருப்பதாகவும் சசிகலா தரப்பினர் குற்றம்சாட்டினார். இதனாலேயே முதல்வர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியதாகவும் சசிகலா தரப்பு விளக்கம் அளித்தது.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அணி
இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அணியாக எங்கள் அணி இருக்கும் என்று கூறினார். நேற்று கட்சித் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்திலும் விவசாயிகள் பிரச்சனைக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என தெரிவித்திருந்தார்.

அரசுக்கு பின்னடைவு
ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அதிகரிக்கும் நிலையில் எடப்பாடி அரசு எப்போது வேண்டுமானாலும் கலைக்கப்படலாம் என்ற சூழல் நிலவி வருகிறது. கட்சியின் தலைமைகள் சிறையில் இருப்பதும் அதிமுக அரசுக்கு பின்னடைவாக உள்ளது.
|
பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டதே..
இந்நிலையில அனைத்து அரசியல் நிகழ்வுகளையும் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டு விளாசும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஸ்டாலினின் பேச்சு குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அணியாக எங்கள் அணி இருக்கும் என ஸ்டாலின் கூறியதை மேற்கோள் காட்டியுள்ள அவர் பூனைக்குட்டி இவ்வளவு சீக்கிரமாக வெளியில் வந்துவிட்டதே என தெரிவித்துள்ளார்.
எப்போது ஆட்சி கலைக்கப்படும் நாம் ஆட்சி அமைக்கலாம் என ஸ்டாலின் காத்துக்கொண்டிருப்பதாக ராமதாஸ் மறைமுகமாக தனது டிவிட்டர் கருத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications