For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அந்த ஒரு வார்த்தை.. கருணாநிதி உடல்நிலை அறிக்கையில் என்ன இருக்கிறது.. முழு விபரம்

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்: காவேரி மருத்துவமனை அறிக்கை- வீடியோ

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி காவேரி மருத்துவமனை வெளியிட்டு இருக்கும் அறிக்கை மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அவரது உடல்நிலை மோசமான நிலையை அடைந்துள்ளது.

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நலிவடைந்து உள்ளது. காவேரி மருத்துவமனையில் அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    Cauvery health bulletin: What is Karunanidhis actual health condition

    தற்போது அவரது உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயங்கள் சில இடம்பெற்று இருக்கிறது.

    காவேரி அறிக்கையில் ''கடந்த சில மணி நேரங்களாக திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பெரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. போதுமான அளவு சிகிச்சை அளித்தும் அவரது முக்கியமான உடல் உறுப்புகள் நலிவடைந்து இருக்கிறது.'' என்றுள்ளனர்.

    இதில் முக்கியமாக ''Deterioration'' ''டெடேரியோரேஷன்'' என்ற மருத்துவ வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்கள். வயது முதிர்வு இல்லை உடல் சுகவீனம் காரணமாக ஒருவரின் உடலில் தொடர்ந்து வேகமாக ஏற்படும் குறைபாடு, உடல்நிலையில் ஏற்படும் வேகமான பாதிப்பை குறிக்க இந்த வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

    Cauvery health bulletin: What is Karunanidhis actual health condition

    இதன்படி அவரது உடல்நிலை மிக மோசமான நிலையை அடைந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் அவரது உடல்நிலை இன்னும் நேரமாக நேரமாக மோசமடையும். கொஞ்சம் கொஞ்சமாக மிக மோசமான நிலையை அடையும்.

    அதேபோல் அந்த அறிக்கையிலேயே அவர் உடல் கவலைக்கிடமாகவும் நிலையற்றும் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

    English summary
    Cauvery health bulletin says Karunanidhi's health condition gets very worst.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X