காவிரி: தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசை கண்டித்து ஏப்.2ல் போராட்டம் - ஜி.கே வாசன்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது மத்திய அரசின் கடமை என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார். தமிழக மக்களை பாஜக அரசு வஞ்சித்து விட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய பாஜக அரசு அவமதிப்புவிட்டதாக ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஏப்ரல் 2ஆம் தேதியன்று போராட்டம் நடத்தப்படும் என்றும் வாசன் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்குள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக, மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடாதது, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், வாரியம் அமைக்கக் கூடாது என கர்நாடக முதல்வர் கருத்து தெரிவித்திருப்பதாகவும், ஜி.கே. வாசன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில், கட்சியின் டெல்டா பகுதி தமாகா மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம், வரும் 31ம் தேதி காலை 11 மணிக்கு, தமது தலைமையில் திருச்சியில் நடைபெறுவதாகவும், ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. வாசன், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது என்பது மத்திய அரசின் கடமையாகும் என்றும் தமிழக மக்களை பாஜக அரசு வஞ்சித்து விட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஏப்ரல் 2ஆம் தேதியன்று மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications