Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வைகோ, வேல்முருகன் உள்ளிட்ட 4000 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டினால் தமிழகம் எத்தியோப்பியாவாக மாறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்தார். சென்னையில் சுங்க இல்லத்தை முற்றுகையிட முயன்ற வைகோ, தி.வேல்முருகன் உள்ளிட்ட 4000 பேர் கைது செய்யப்பட்டனர்.

Cauvery Movement stage protests in Central government offices

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக மாநில அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை சென்னை சுங்க இல்லம் அருகே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைத்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது:

காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், தமிழகத்தின் உயிர் வாழ்வாதாரங்களில் தலையாயதான காவிரி நதிநீர் உரிமையைப் பாதுகாக்கவும், சட்ட விரோதமாகவும், நீதிக்குப் புறம்பாகவும் கர்நாடக மாநிலத்தில் மேகதாது தாதுமணலில் இரண்டு அணைகளைக் கட்ட முனைந்துவிட்ட கர்நாடக அரசின் வஞ்சகத் திட்டத்தை முற்றாகத் தடுத்து நிறுத்தவும், தஞ்சை மாவட்டத்திலும், சிவகங்கை மாவட்டத்திலும் நிலம், நீர், காற்றுமண்டலம் அனைத்திலும் பலத்த நாசம் விளைவிக்கும் மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை தொடங்க விடாமல் தடுத்து நிறுத்தவும் தஞ்சையில் ஜனவரி 20 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

Cauvery Movement stage protests in Central government offices

இதில் தமிழக அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், தமிழகத்தில் காவிரி உரிமைக்குப் போராடும் இயக்கங்கள், தமிழ் இன உணர்வு அமைப்புகள், வணிகர் சங்கங்கள், மீனவர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்புகள் பங்கேற்றுச் சிறப்பித்தன.

ஏமாற்றிய மத்திய அரசு

காவிரி நதிப் பிரச்சனையில் சட்டப்படி தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்குமுறை ஆணையத்தையும் அமைக்க வேண்டிய கடமையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.

Cauvery Movement stage protests in Central government offices

உச்சநீதிமன்ற ஆணை

காவிரி நதிநீர் தாவாவின் மீது உச்ச நீதிமன்ற ஆணையின் பேரில் அமைக்கப்பட்ட நடுவர் மன்றம், 2007 ஆம் ஆண்டில் அளித்த இறுதித் தீர்ப்புக்கு முற்றிலும் எதிராக, கர்நாடக அரசு காவிரியில் மேகதாது, தாதுமணல் ஆகிய இடங்களில் இரண்டு புதிய அணைகளைக் கட்டவும், அவற்றில் 48 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கவும், அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது, அந்தப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றிவிட்டு, அணைகளைக் கட்ட உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரி உள்ளது.

Cauvery Movement stage protests in Central government offices

நடுவர் மன்ற தீர்ப்பு

நாங்கள் அணை கட்டுவதை எவராலும் தடுக்க முடியாது என்று கர்நாடக அரசின் முதல் அமைச்சர் இறுமாப்போடு பேசுகிறார்,

மைசூரு, பெங்களூரு நகரங்களின் குடிநீர்த் தேவைகளுக்காகத்தான் அணைகளைக் கட்டுகிறோம் என்று அப்பட்டமாகப் பொய் சொல்கிறது. அத்துடன் கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய இடங்களில் புதிதாக நான்கு தடுப்பு அணைகளைக் கட்டவும் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது. இதன் முலம் நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக புதிதாக 11 இலட்சம் ஏக்கரில் காவிரி நீர்ப் பாசனத்திற்கு ஏற்பாடு செய்து வருகின்றது.

14 மாவட்ட குடிநீர் பாதிப்பு

தற்போதைய திட்டப்படி அணைகள் கட்டப்பட்டுவிட்டால், அதன் பிறகு சொட்டுத் தண்ணீர்கூட மேட்டூருக்கு வரப்போவது இல்லை, இதன் விளைவுகளைக் கற்பனை செய்யக்கூட முடியவில்லை.

சென்னை மாநகரம் உள்ளிட்ட தமிழகத்தின் 14 மாவட்டங்களிலும், புதுவை மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திலும் வாழும் 5 கோடி மக்கள் குடிதண்ணீரை இழப்பார்கள்.

பஞ்சம், பட்டினி

3 கோடி விவசாயிகள் வேளாண்மையை இழப்பார்கள். நன்செய் பொங்கிய தஞ்சைத் தரணி பஞ்சப் பிரதேசம் ஆகும். பசியும் பட்டினியும் மக்களை வாட்டி வதைக்கும். தமிழகத்தின் பெரும்பகுதி இன்னொரு எத்தியோபியாவாக மாறும்.

புதிய அணைகள் கட்ட

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், புதிய அணைகள் கட்டுவதற்கான சுற்றுச் சூழல் அனுமதியும், மத்திய நீர்வள ஆணைய அனுமதியும் கொடுக்கப்போவது இல்லை என்று மத்திய அரசு வெளிப்படையாக ஒருபுறத்தில் அறிவித்துக் கொண்டே, மறுபுறத்தில் கர்நாடக அரசு அணைகள் கட்டுவதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவது என்று முடிவு செய்து இருப்பதாகத் தெரிகிறது.

பேராபத்து அபாயம்

தமிழகத்திற்கு நேர இருக்கின்ற இப்பேராபத்தை முன்கூட்டியே தடுக்கவும், கட்சி, சாதி, மத எல்லைகளைக் கடந்து தமிழக மக்கள் ஒருசேர எழுந்து அறவழியில் போராட வேண்டும். கர்நாடகத்தில் காவிரிக்குக் குறுக்கே அணைகள் கட்டுவதை தடுக்க வேண்டிய கடமையை மத்திய அரசுக்கு உணர்த்தவும், தஞ்சைத் தரணியிலும். சிவகங்கைச் சீமையிலும் நிலம், நீர், காற்று மண்டலம் அனைத்தையும் நாசமாக்கி, விவசாயிகளுக்குப் பாசன நிலம் இல்லாமலும், பொதுமக்களுக்கு குடிதண்ணீர் இல்லாமலுமான பெரும் தீங்கான நிலையை ஏற்படுத்துவதுடன், அவர்களுக்கு இருதயம், நுரையீரல், சரும நோய்களும், புற்று நோயும் ஏற்படுத்தக்கூடிய நாசகார மீத்தேன் எரிவாயுத் திட்டத்தைத் தொடங்க விடாமல் தடுக்க வேண்டிய கடமை தமிழக மக்களுக்கு உண்டு.

மீத்தேன் திட்டம்

இன்றைய தமிழக அரசு 2011 இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன், மீத்தேன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தது. இருந்தபோதிலும், மாண்புமிகு நரேந்திரமோடியின் மத்திய அரசு, மீத்தேன் திட்டத்தை நிறைவேற்றுவதில் மிகத் தீவிரம் காட்டுகிறது.

அமெரிக்காவில் நியூயார்க் மாநில ஆளுநர் ஆண்ட்ரு க்வோமா அவர்கள், மீத்தேன் எரிவாயுத் திட்டம் சுற்றுச் சூழலை நச்சுமயமாக்கும் என்பதால் நியூயார்க் மாநிலம் முழுவதிலும் அத்திட்டத்திற்கு தடை விதித்து, அண்மையில் 2014 டிசம்பர் 17 ஆம் தேதி அன்று பிரகடனமே செய்துவிட்டார். உலகில் பல்வேறு நாடுகளில் மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன.

வருமுன் காப்போம்

‘வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்' என்ற வள்ளுவப் பெருந்தகையின் குறட்பா, வரப்போகிற ஆபத்தை முன்கூட்டியே தடுப்பதுதான் அறிவுடைமை; இல்லையேல், நெருப்பில் சிக்கிய வைக்கோல்போல் அழியும் ஆபத்து நேரும் என்று எச்சரிக்கின்றது.

முற்றுகைப் போராட்டம்

எனவே, தமிழகத்தைச் சூழ்ந்து வரும் பேராபத்தைத் தடுத்து தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காத்து, வாழும் தலைமுறையினரையும், வரப்போகும் தலைமுறையினரையும் பாதுகாக்க தமிழக மக்கள் சூளுரைக்க வேண்டிய தருணம் இதுவாகும். காவிரிக்குக் குறுக்கே மேகதாட்டு தாதுமணலில் கர்நாடக அரசு கட்ட முனைந்துவிட்ட அணைகளைக் கட்ட விடாமல் தடுக்க வேண்டிய முழுப் பொறுப்பும் இந்தியாவின் மத்திய அரசுக்கு உண்டு என்பதால், அந்தக் கடமையைச் செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தவும், நாசகார மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை தஞ்சை மாவட்டத்திலும், சிவகங்கை மாவட்டத்திலும் செயல்படுத்தும் முடிவை மத்திய அரசு இரத்து செய்யுமாறு வலியுறுத்தியும், பிப்ரவரி 18 ஆம் நாள் அன்று சென்னை மாநகரம் தவிர்த்து காவிரி நதி நீரால் பயன்பெறும் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய தமிழகத்தின் 13 மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் இயங்குவதைத் தடுத்து, அறவழி முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

சுங்க இல்லம் முற்றுகை

அதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று மார்ச் 11 ஆம் நாள் புதன் கிழமை தலைநகர் சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சென்னை சுங்க இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது என்றார் வைகோ

4000 பேர் கைது

இதனிடையே இந்த சுங்க அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வைகோ, கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், பி.ஆர்.பாண்டியன், லெனின் ராஜப்பா, டாடக்டர் மாசிலாமணி, மல்லை சத்யா, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, தி.வேல்முருகன், திருஞானம், தெகலான் பாகாவி, த.வெள்ளையன், பெ.மணியரசன், பசீர் அகமது, தியாகு, அருள்குமார் உள்ளிட்ட தலைவர்களும், நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+