உலகின் கவனத்தை ஈர்த்த காவிரி.. புரட்சியாக உருவெடுத்த அண்ணாசாலை போராட்டம்!
சென்னையில் நடக்கும் காவேரி போராட்டம் உலக அளவில் கவனம் ஈர்த்து இருக்கிறது.
Recommended Video

சென்னை: சென்னையில் நடக்கும் காவேரி போராட்டம் உலக அளவில் கவனம் ஈர்த்து இருக்கிறது. இது ஒரு தேசிய பிரச்சனை என்று நிரூபிக்க நடத்தப்பட்ட இந்த போராட்டம் பெரிய அளவில் மாறி உலக அளவில் வைரலாகி உள்ளது.
கொல்கத்தா அணிக்கும் சென்னைக்கும் இடையில் இன்று ஐபிஎல் போட்டி நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானம் செல்லும் வழியில் தற்போது காவிரி போராட்டம் நடக்கிறது.
இதனால் போட்டிக்கு பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டம் குறித்துதான் தற்போது மொத்த இந்தியாவும் பேசிக்கொண்டு உள்ளது.

தேசிய அளவில் வைரல்
தற்போது காவிரி பிரச்சனை இருமாநில பிரச்சனையாக இல்லாமல் தேசிய பிரச்சனையாக மாறியுள்ளது. மற்ற மாநில அணி வீரர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதால் இந்த பிரச்சனை இந்தியா முழுக்க பேசப்பட்டு வருகிறது. காவிரி பிரச்சனையை துச்சமென கருதிய தேசிய மீடியாக்கள் கூட இதை பற்றித்தான் இப்போது பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

வெளிநாட்டு வீரர்கள்
சென்னை அணியிலும், கொல்கத்தா அணியிலும் நிறைய வெளிநாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த வீரர்கள், ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர்கள், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளை சேர்ந்த வீரர்கள் கூட இருக்கிறார்கள். இவர்கள் யாருக்கும் தெரியாமல் இருந்த காவிரி பிரச்சனை இப்போது வெளியே வந்து இருக்கிறது.

ஒருவகையில் வெற்றி
இந்த போராட்டம் ஒரு வகையில் வெற்றியை பெற்று இருக்கிறது என்று கூட கூறலாம். போராட்டம் செய்த மக்களின் முக்கியமான ஒரு எதிர்பார்ப்பு, தேசிய அளவில் இந்த பிரச்சனையை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான். ஆனால் இந்த போட்டி இப்போது உலக அளவில் வைரல் ஆகி உள்ளது.

இன்னும் இருக்கிறது
ஆனால் இந்த போராட்டம் இன்னும் முடியவில்லை. இன்று இரவு 11 மணிக்கு போட்டி முடியும் வரை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இப்போதே டிவிட்டரில் சேப்பாக்கம் சென்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் வைரலாகிவிட்டது. இதனால் உலக அளவில் இன்னும் சில நிமிடத்தில் இந்த ஹேஷ்டேக் வைரலாக வாய்ப்பு உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications