காவிரி: நாளையே தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும்.. ஸ்டாலின் கோரிக்கை
காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகள், விவசாய அமைப்புகளின் கூட்டத்தை தமிழக அரசு நாளையே கூட்ட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
Recommended Video

டெல்லி: காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகள், விவசாய அமைப்புகளின் கூட்டத்தை தமிழக அரசு நாளையே கூட்ட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை செயலர் யுபி சிங் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். காவிரி வழக்கில் வரைவு திட்ட அறிக்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜராகி, வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து காவிரி வரைவு திட்ட அறிக்கை நகல்கள் 4 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி தொடர்பான வழக்கை மே 16ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த தீர்ப்பு வந்ததை அடுத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன்படி ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 17ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று கூறினார். ஏற்கனவே நாளை நடக்கும் என்று கூறப்பட்டு இருந்த ஸ்டாலின் தலைமயிலான அனைத்துக் கட்சி கூட்டம், 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் ஸ்டாலின் தமிழக அரசுக்கு முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதன்படி, காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகள், விவசாய அமைப்புகளின் கூட்டத்தை தமிழக அரசு நாளையே கூட்ட வேண்டும். இந்த அனைத்துக் கட்சி கூட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், அதனை சட்டரீதியாக செயல்படுத்துவதை வலியுறுத்தும் வகையிலும் அமைய வேண்டும், என்றுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications