தமிழக எல்லை வந்தது காவிரி நீர்.. வழக்கத்தைவிட தாமதம்
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் திறந்து விடப்பட்ட நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை இன்று காலை வந்தடைந்தது.
தருமபுரி : கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் இன்று காலை தமிழக எல்லையான பென்னாகரத்தில் உள்ள பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் காவிரியிலும், அதன் துணை நதிகளான ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய வற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மண்டியா மாவட்டத்தில் காவிரியின் குறுக்கேயுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து கணிச மாக உயர்ந்துள்ளது. இதேபோல கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

124.8 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணை யின் நீர்மட்டம் 73.95 அடி வரை உயர்ந்தது. இதேபோல கபினி அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் கால்வாய்கள் மூலம் காவிரியில் கலந்து, பிலிகுண்டுலு வழியாக சுமார் 1,500 கன அடி நீர் என்ற அளவில் தமிழகத்தை அடையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஜுன் 30ம் தேதி திறந்துவிடப்பட்ட காவிரி நீரானது இன்று காலை தமிழக எல்லையான தருமபுரி மாவட்டம் பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. வழக்கமாக 3 அல்லது 5 நாட்களில் காவிரி நீர் தமிழக எல்லை வந்து விடும் நிலையில் 8 நாட்கள் கழித்தே இந்த முறை தமிழக எல்லையை காவிரி நீர் வந்தடைந்தது. இதனால் காவிரி நீர் மேட்டூர் அணை மூலம் காவிரி டெல்டா பகுதிகளை சென்றடையுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications