For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தொடர்ந்து வரும் காவேரி தண்ணீர்

கர்நாடகவில் இருந்து தமிழகத்திற்கு கபினி மற்றும் கே.ஆர்.எஸ்அணைகளில் இருக்கும் தண்ணீரை காவிரி நதி மூலமாக திறந்துவிடப்பட்டது

By Rajeswari
Google Oneindia Tamil News

சென்னை: கர்நாடகவில் இருந்து தமிழகத்திற்கு கபிணி மற்றும் கே.ஆர்.எஸ்அணைகளில் இருக்கும் தண்ணீரை காவிரி நதி மூலமாக திறந்துவிடப்பட்டது

கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 5,949 கன அடி நீர் வெளியேற்றம், இன்று காலை நேர நிலவரப்படி கர்நாடக அணைகளின் நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டது .

Cavery reached Tamil Nadu from Karnataka - recent update

2284 கடல் மட்டத்தில் இருந்து உயரம் கொண்ட கபினி அணையில் 2283.14 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர் வரத்து 7,000 கனஅடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து 5,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து 1,200 கன அடி நீர் கால்வாய் மூலமாக கர்நாடக விவசாயிகளுக்கும், 3,800 கன அடி நீர் காவிரி நதி மூலமாக தமிழகத்திற்கும் திறக்கப்பட்டுள்ளது.

124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ் அணையில் 123.79 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 5,493 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிற நிலையில் அணையில் இருந்து 4,657 கன அடி நீர் வெளியேற்றபட்டு வருகிறது.

அணையில் இருந்து 2,508 கன அடி நீர் கால்வாய் மூலமாக கர்நாடக விவசாயிகளுக்கும், 2,149 கன அடி நீர் காவிரி நதி மூலமாக தமிழகத்திற்கும் திறக்கப்பட்டுள்ளது.

English summary
Karnataka was opened Kabini and K.R.S dams water through carvery river to Tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X