பேராசிரியை நிர்மலா தேவிக்கும் மாணவர் கருப்பசாமிக்கும் தொடர்பு.. ஆதாரத்தை சமர்பித்தது சிபிசிஐடி
பேராசிரியை நிர்மலா தேவிக்கும் மாணவர் கருப்பசாமிக்கும் இடையே தொடர்பு இருந்ததற்கான ஆதாரத்தை சிபிசிஐடி போலீஸ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சமர்ப்பித்துள்ளது.
Recommended Video

மதுரை: பேராசிரியை நிர்மலா தேவிக்கும் மாணவர் கருப்பசாமிக்கும் இடையே தொடர்பு இருந்ததற்கான ஆதாரத்தை சிபிசிஐடி போலீஸ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சமர்ப்பித்துள்ளது.
கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்தார் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி. இதுதொடர்பான தொலைபேசி ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிர்மலா தேவிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. நிர்ர்மலா தேவி விவகாரம் தொடர்பாக தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது.

குரல் பரிசோதனை
இதையடுத்து கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொலைபேசி ஆடியோவில் இருப்பது அவரது குரல்தானா என்பதை ஆய்வு செய்யும் வகையில் அண்மையில் குரல் பரிசோதனை நடத்தப்பட்டது.

ஒப்புக்கொண்ட நிர்மலா தேவி
அதில் தொலைபேசி உரையாடலில் இருப்பது நிர்மலா தேவியின் குரல்தான் என்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து நிர்மலா தேவியும் அது தனது குரல்தான் என ஒப்புக்கொண்டார்.

மாணவருடன் தொடர்பு
இந்நிலையில் பேராசிரியை நிர்மலா தேவிக்கும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி இடையே தொடர்பு இருந்ததை சிபிசிஐடி போலீஸ் உறுதி செய்துள்ளது. இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்ட ஆதாரங்களை சிபிசிஐடி ஹைகோர்ட் கிளையில் சமர்ப்பித்துள்ளது.

சிபிசிஐடி எதிர்ப்பு
நிர்மலா தேவியுடன் கருப்பசாமிக்கு கூட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதால் கருப்பசாமிக்கு ஜாமீன் வழங்க கூடாது என சிபிசிஐடி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications