கோவை அருகே பயங்கரம்: கள்ள உறவு காரணமாக ஒருவர் சரமாரி வெட்டி கொலை
கள்ள உறவு காரணமாக ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
கோவை: சரவணம்பட்டி அருகே டாஸ்மாக் பாரில் கள்ளத்தொடர்பு காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திர மூர்த்தி 45. இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமான பெண்ணும், ஒரு பையனும் உள்ளனர். அதே பகுதியில் கோபி என்கிற குமாரவேல் கேபிள் கலெக்சன் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜோதிமணி இறந்து எட்டு ஆண்டுகள் ஆகியுள்ளது. இவரது மகன் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கோபிக்கும் ராமசந்திர மூர்த்தியின் மனைவி லதாவுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. லதா-கோபி தொடர்பு குறித்து ராமசந்திர மூர்த்தி கோபியை பலமுறை எச்சரித்தும் கண்டித்தும் உள்ளதாக தெரிகிறது. ஆனால் தொடர்ந்து தன்னுடைய மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த கோபி என்கிற குமாரவேலை கொலை செய்ய திட்டம் தீட்டினார் ராமச்சந்திர மூர்த்தி.
அதன்படி, கீரணத்தம் பகுதியிலுள்ள அரசு மதுபான கடையின் பார் ஒன்றிற்கு கோபியை நேற்று அழைத்து சென்றார்.பின்னர் அங்குவைத்து கத்தியால் ஆறு இடங்களில் இடது வயிற்றுப்பகுதியில் கோபியை குத்தினார். கோபி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கிருந்த ஊழியர்கள் ராமசந்திரமூர்த்தியை பிடித்து சரவணம்பட்டி காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications