போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி உட்பட 5 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!
சேகர் ரெட்டி உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதேபோல் சேகர் ரெட்டி உள்ளிட்டோரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடியானது.
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட போயஸ் கார்டனுக்கு மிக நெருக்கமான சேகர் ரெட்டி உட்பட 5 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
போயஸ் கார்டனுக்கு மிக நெருக்கமானவர் சேகர் ரெட்டி. இவரது வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையின் போது ரூ147 கோடி ரொக்கம், 130 கிலோ தங்க கட்டிகள் சிக்கின. இதில் ரூ34 கோடி புதிய 2,000 ரூபாய் நோட்டுகள்.

இச்சோதனை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சேகர் ரெட்டி தமிழக அரசின் முதன்மை கான்டிராக்டர். இவருக்கு போயஸ் கார்டன் மற்றும் மூத்த அமைச்சர்கள் பலரும் நெருக்கம். இவர்களது பணம் தான் இவை என கூறப்பட்டு வருகிறது. இதையடுத்து அமலாக்கப் பிரிவு, சிபிஐ ஆகியவை சேகர் ரெட்டி மீது வழக்குப் பதிவு செய்தது.
இவ்வழக்கில் சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாசலு, நண்பர் பிரேம், தொழில் கூட்டாளிகள் திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சேகர் ரெட்டியுடன் நெருக்கமாக இருந்த தலைமை செயலராக இருந்த ராமமோகன் ராவ், அவரது மகன் விவேக் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.
இதனிடையே சேகர் ரெட்டி உட்பட 5 பேர் மீது ஜாமீன் கோரி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி விஜயலட்சுமி விசாரணை நடத்தி வந்தார். இந்த விசாரணையின் முடிவில் 5 பேரின் ஜாமீன் மனுக்களையும் நீதிபதி விஜயலட்சுமி தள்ளுபடி செய்தார். அதேபோல் சேகர் ரெட்டி உள்ளிட்டோரை காவலில் எடுத்து விசாரிக்க கோரும் சிபிஐ மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications