போயஸ்கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி கைது- சிபிஐ நடவடிக்கை
போயஸ்கார்டன் வீட்டுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி வீட்டில் பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி. போயஸ் கார்டன் வீட்டிற்கு நெருக்கமான இவர் தமிழக பொதுப்பணித்துறை ஒப்பந்ததராகவும், கட்டுமான தொழிலும் செய்து வந்தார். உயர்மட்ட தொடர்பு காரணமாக தமிழகத்தில் ஆற்று மணல் குவாரிகளையும் சேகர் ரெட்டி தனது நிறுவனத்தின் மூலம் நடத்தி வந்தார்.
இந்தத் தொழிலில் அவர் அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகள் துணையோடு பல முறைகேடு செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.
இவர், பழைய ரூபாய் நோட்டுகளுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றிக் கொடுப்பதாகவும், ஏராளமான ரொக்கப் பணத்தை பதுக்கிவைத்திருப்பதாகவும் வருமான வரித்துறைக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாச ரெட்டி மற்றும் நண்பர் பிரேம் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 8ஆம் தேதி முதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வருமான வரித்துறையினரால், மொத்தம் 131 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதில், 92 கோடி ரூபாய் புதிதாக அச்சிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 171 கிலோ தங்கக்கட்டிகள் சிக்கின.
இந்நிலையில், சேகர் ரெட்டி மீது சிபிஐ மற்றும் மத்திய அமலாக்கப் பிரிவினர் தனித்தனியே வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் சிபிஐ பிரிவினர், லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழும், சேகர் ரெட்டிக்கும் அரசு அதிகாரிகளுக்குமிடையே உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

சிடி ஆதாரம்
வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் மிக முக்கியமான சிடி ஆதாரம் ஒன்றும் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அதில் தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் அதிகார மையம் மற்றும் 5 மிக மூத்த அமைச்சர்களுக்கு சொந்தமானதே பிடிபட்ட பணமும் தங்கமும் என்ற விவரம் அடங்கியுள்ளதாம். சிக்கிய சிடியில் உள்ள விவரங்கள் அப்படியே டெல்லி மேலிடத்துக்கு அனுப்பப்பட்டுவிட்டதாம்.

விசாரணை வளையத்தில் சேகர் ரெட்டி
சேகர் ரெட்டி ரூ. 92 கோடிக்கு புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் யாரெல்லாம் உதவி செய்தார்கள் என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். அதேவேளையில் அமலாக்கத்துறையினர், சேகர் ரெட்டி முறைகேடாக பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை செய்கின்றனர்.

சேகர் ரெட்டி கைதாகிறார்
சேகர் ரெட்டி மீது சிபிஐ மற்றும் மத்திய அமலாக்கப் பிரிவினர் தனித்தனியே வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் சிபிஐ பிரிவினர், லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழும், சேகர் ரெட்டிக்கும் அரசு அதிகாரிகள் அமைச்சர்களுக்குமிடையே உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பின்னர் சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டார்.

புதிய ரூபாய் நோட்டுக்கள்
அதேபோல் மத்திய அமலாக்கப் பிரிவினர், பணமாற்ற தடைச் சட்டத்தின் கீழும், சேகர் ரெட்டிக்கும் மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ள உள்ளனர். மேலும் சேகர் ரெட்டியிடம் சிக்கிய புதிய 92 கோடி ரூபாய் பண மாற்றம் குறித்து வங்கி அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நண்பர்களும் கைதாவார்கள்
அதேபோல், சேகர் ரெட்டியிடம் சிக்கிய 171 கிலோ தங்கக்கட்டிகள் வெளிநாட்டிலிருந்து கடத்திக்கொண்டு வரப்பட்டதா என்று அமலாக்கப் பிரிவினர் விசாரணை மேற்கொள்ளவிருக்கின்றனர். சேகர் ரெட்டி முக்கிய தகவலை வெளியே சொல்லும் பட்சத்தில் சேகர் ரெட்டி மட்டுமல்லாது அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications