சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது: 94% மாணவ, மாணவிகள் தேர்ச்சி
டெல்லி:சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த தேர்வில் 94% மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். 92% மாணவிகளும், 91% மாணவர்களும் தேர்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை www.cbseresults.nic.in, www.results.nic.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் பார்க்கலாம்.
இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள், சுமார் 10 லட்சத்து 67 ஆயிரத்து 900 பேர், 12ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் 13 ஆயிரத்து 814 பேர் எழுதியுள்ளனர். 12ம் வகுப்பு தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 22 வரை நடைபெற்றது. இந்நிலையில், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று என மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி ஏப்ரல் 22ம் தேதி வரை நடந்தது.
இந்த தேர்வில் டெல்லி, அஜ்மீர், சென்னை, பஞ்ச்குலா, அலகாபாத் உள்பட 10 மண்டலங்களை சேர்ந்த 22 லட்சத்து 70 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதினர், சென்னை, அஜ்மீர், அலகாபாத், பஞ்ச்குலா மண்டலங்களில் 10 லட்சத்து 67 ஆயிரத்து 900 பேர் எழுதினர். அவர்களில் 6 லட்சத்து 21 ஆயிரத்து 259 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 46 ஆயிரத்து 641 பேர் மாணவியர்.
கடந்த ஆண்டு இந்த மண்டலங்களில் 10 லட்சத்து 40 ஆயிரத்து 368 பேர் தேர்வு எழுதினர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 2.65 சதவீதம் மாணவ மாணவியர் அதிகமாக 12ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளனர். தமிழகத்தில் 13,814 பேர் இந்த தேர்வினை எழுதியுள்ளனர். நாடு முழுவதும் 1 லட்சத்து 6 ஆயிரத்து 746 பேர் தனித் தேர்வர்களாக எழுதியுள்ளனர்.
இந்நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை www.cbseresults.nic.in, www.results.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். இந்த தேர்வில் 94% மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். 92% மாணவிகளும், 91% மாணவர்களும் தேர்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications