திருவாரூரில் தனியார் பஸ்.. மினி பஸ் மோதிய பயங்கர விபத்தின் சிசிடிவி காட்சி.. குறுக்கே வந்த பைக்!
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: திருவாரூரில் தனியார் பேருந்து மீது மோதிய மினி பேருந்து ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
நேற்று திருவாரூர் அருகே தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பின்னாலேயே இருசக்கர வாகனம் ஒன்றும் சென்று கொண்டிருந்தது.

மினி பேருந்து அதிவேகத்தில் முன்னேறி சொன்று கொண்டிருந்த போது, முன்னால் இருந்து இருசக்கர வாகனத்தை முட்டியபடி நேராக தனியார் பேருந்தின் பின்பக்கத்தில் மினி பேருந்து மோதியது.
இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். உயிரிழப்பு மற்றும் காயம் குறித்து தகவல்கள் இதுவரை தெரியவில்லை.
அதேநேரம் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் தான் விபத்து எப்படி நடந்தது என்பது தெரியவந்துள்ளது.













Click it and Unblock the Notifications