மதுரையில் இந்தியன் வங்கி கொள்ளை விவகாரம்: சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் ஆய்வு
இந்தியன் வங்கியின் கொள்ளையடிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
Recommended Video

மதுரை: இந்தியன் வங்கிக் கிளையில் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெற்ற திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
மதுரை விளக்குத்தூண் அருகிலுள்ள இந்தியன் வங்கிக் கிளையில் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி பட்டப்பகலில் காசாளரின் அறையில் இருந்த ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வங்கி ஊழியரின் பணி ஓய்வுக்கான பாராட்டு விழா அன்றைய தினம் வங்கியின் மாடியில் நடைபெற்றதால், ஊழியர்கள் அதில் பங்கேற்க சென்றிருந்தனர். வங்கி காசாளரும் பணத்தை பெட்டியில் வைத்து பூட்டாமல், அப்படியே வைத்துவிட்டு வாழ்த்து செல்ல விழாவுக்கு சென்றுவிட்ட நிலையில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
இதுகுறித்து வங்கியின் சிசிடிவி காட்சிகளை தற்போது போலீசார் வெளியிட்டுள்ளனர். வாடிக்கையாளர் போல் தொப்பி அணிந்து உட்கார்ந்திருக்கும் அந்த நபர், அனைவரும் விழாவுக்கு சென்றுவிட்ட நிலையில் பணத்தை கொள்ளையடிக்க சுற்றுமுற்றும் பார்க்கிறார். அங்கு யாரோ வருவதுபோல் இருக்கவும் மீண்டும் இயல்பாக இருப்பதைபோல் வந்து உட்கார்ந்துகொள்கிறார்.
மீண்டும் காசாளரின் இருக்கை பக்கம் உள்ளே இறங்கி, பணக்கட்டுகளை எடுத்து தன் பையில் திணிக்கிறார். மறுபடியும் ஏறி வந்து இரண்டு பணக்கட்டுகளை எடுத்து பையில் திணித்து வெளியேறுகிறார். இந்த காட்சிகளை வெளியிட்டுள்ள போலீசார் அவற்றின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் ஒரு வங்கியில் அதுவும் சிசிடிவி கேமரா பொருத்தியிருப்பது தெரிந்தும் காசாளரின் இருக்கையிலேயே அத்துமீறி நுழைந்து பணம் திருடப்படும் காட்சி பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications