பிப்ரவரி 4ல் ஃபேஸ்புக் பர்த் டே... உலகின் எங்கிருந்தும் நண்பர்கள் லைவ்வாக பேசலாம்! #LiveWithFriends
முகநூலின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக உலகின் எந்த மூலையில் இருந்தும் லைவ் சேட் செய்யும் வசதியை வழங்குகிறது ஃபேஸ்புக்.
சென்னை: ஃபேஸ்புக் நிறுவப்பட்ட பிப்ரவரி 4ம் தேதியை அந்த நிறுவனம் நண்பர்கள் தினமாக கொண்டாடுகிறது. அன்றைய நாளில் உலகின் எந்த மூலையில் இருந்தும் நண்பர்கள் லைவ் சேட் அல்லது பிப்ரவரி 2 முதல் 4ம் தேதிகளில் வீடியோக்களை அப்லோடு செய்து கொண்டாடும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4ம் தேதி நட்பின் முக்கியத்துவத்தை கொண்டாடும் விதமாகவும், நண்பர்கள் ஒருவருக்கொருவர் எப்போதும் தொடர்பில் இருக்கவும், முகநூலின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாகவும் அன்றைய தினத்தை முகநூல் நண்பர்கள் தினமாகக் கொண்டாடுகிறது. இந்த ஆண்டு கொண்டாட்டதின் போது #LiveWithFriends என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஒருவருக்கொருவர் எந்த மூலையில் இருந்து இணையலாம். வீடியோ மூலம் நண்பர்கள் சேட் செய்தோ, முன்கூட்டியோ பதிவு செய்த வீடியோக்களையோ அல்லது நேரலையிலோ நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்களது நட்பை வெளிப்படுத்தலாம்.

பிப்ரவரி 2- 4 வரை சிறப்பு வீடியோ
முகநூலின் இந்த சிறப்பு வசதியை பயன்படுத்த ஒரு நண்பரிடமோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நண்பர்களுடனோ சேட் செய்யும் வீடியோ பதிவை போஸ்ட் செய்யலாம். பிப்ரவரி 2 முதல் பிப்ரவரி 4ம் தேதி வரையில் #LiveWithFriends மற்றும் #FriendsDay என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வீடியோக்களை போஸ்ட் செய்யலாம்.

கோ லைவ் ஆப்ஷன்
இதே போன்று உங்கள் நண்பர்களுடன் நீங்கள் செலவிடும் முக்கியமான தருணங்களை கோ லைவ் மூலம் நேரலையில் முகநூலில் வெளியிடலாம். அதே போன்று உங்கள் நட்பு குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

2 ஹேஷ்டேக்குகள் அறிமுகம்
Live With என்ற ஹேஷ்டேக் மூலம் குக்கிராமத்தில் இருந்து கூட உங்கள் நண்பருடன் சேர்ந்து கோ லைவ் செய்யலாம் என்பது இதன் சிறப்பு. இந்த சிறப்பு கொண்டாட்டத்தில் நீங்களும் பங்கேற்று முகநூலின் நண்பர்கள் தின கொண்டாட்டத்தில் பங்கேற்க தகுதி பெறலாம். பிப்ரவரி 2 முதல் 4 வரை #LiveWithFriends மற்றும் #FriendsDay என்ற ஹேஷ்டேக் மூலம் இந்த கொண்டாட்டத்தில் நீங்களும் இணைய முடியும்.

பயன்பாட்டாளர்கள் ஆவல்
உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ள முகநூலின் இந்த அறிவிப்பு நண்பர்களுக்கு மிகவும் நல்ல செய்தியாக இருக்கிறது. நிச்சயம் முகநூலில் நண்பர்கள் தினத்தை ஜமாய்த்து விடலாம் என்று உற்சாகமாக இருக்கின்றனர் பயன்பாட்டாளர்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications