பஸ் கட்டண உயர்வுக்கு மத்திய அரசை குறை சொல்வதா? அமைச்சர் ஜெயக்குமாருக்கு தமிழிசை கண்டனம்
பேருந்து கட்டண உயர்வுக்கு எந்த விதத்திலும் மத்திய அரசு காரணம் அல்ல என்று தமிழிசை தெரிவித்து உள்ளார்.
கன்னியாகுமரி : பேருந்து கட்டண உயர்வுக்கு மத்திய அரசு எந்த விதத்திலும் காரணமில்லை.தேவையில்லாமல் இதில் மத்திய அரசு மீது குறை சொல்ல வேண்டாம் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
தமிழக அரசுப் பேருந்துகளில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை அடுத்து கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல இடங்களில் பொதுமக்கள், அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் போராடி வருகின்றன.

இந்நிலையில், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் பேருந்து கட்டண உயர்வுக்கு தமிழக அரசு எந்த விதத்திலும் காரணமில்லை என்றும், போதிய அரசு நிதியை மத்திய அரசு வழங்காததால் தான் கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இதற்கு முழுக்க முழுக்க மத்திய அரசு தான் காரணம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இன்று குமரி மாவட்டம் வழுக்கம்பாறையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து உள்ளார்.
அவர் பேசுகையில், தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு மத்திய அரசு காரணம் இல்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், மத்திய அரசு ஒதுக்கிய நிதியை தமிழக அரசு சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்று தமிழிசை குறிப்பிட்டு உள்ளார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications