தமிழகத்தை முற்றிலும் பாலைவனமாக்கும் செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது : திருமாவளவன்
தமிழகத்தை முற்றிலும் பாலைவனமாக்கும் செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் : தமிழகத்தை அனைத்து வகைகளிலும் பாலைவனமாக்கும் செயல்களில் மத்தியஅரசு ஈடுபட்டு வருகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஓ.என்.ஜி.சி நிறுவனப் பணிகளைக் கண்டித்து தஞ்சாவூரில் நடந்த முற்றுகைப்போராட்டத்தில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, தமிழகத்தின் இயற்கை வளங்களை பாதிக்கும் திட்டங்களாக ஷெல் எரிவாயு, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் கிணறுகள் என அடுத்தடுத்து திட்டங்களை மத்திய அரசு தமிழகத்தில் செயல்படுத்த அனுமதி அளித்து வருகிறது.
இந்த திட்டங்கள் அனைத்தும் முதலில் கேரளாவில் செயல்படுத்துவதாக இருந்தது. ஆனால், கேரள மக்களின் தொடர் போராட்டம் காரணமாக அனைத்து திட்டங்களையும் தமிழகத்தில் செயல்படுத்தி வருகின்றனர்.
இதேபோல், நியூட்ரினோ திட்டமும் வட மாநிலங்களில் செயல்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அம்மாநில அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் போராட்டத்தினால் அந்தத் திட்டமும் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.
இப்படி தொடர்ந்து தமிழக அரசும், மத்திய அரசும் தமிழகத்தை பாலைவனமாக்கும் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. ஒருபோதும் இந்த திட்டங்களைச் செயல்படுத்த விடமாட்டோம் என்றும் மக்களைத் திரட்டி போராடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications