விஜய் மல்லையா போல கார்த்தி சிதம்பரமும் வெளிநாட்டுக்கு ஓடிவிடுவார்... ஹைகோர்ட்டில் மத்திய அரசு
கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்குத் தப்பிவிடுவார் என்பதால் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்ததாக மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
சென்னை: கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டிற்கு தப்பிவிடக்கூடாது என்பதற்காகவே இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் சர்குலர் அனுப்பியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லாத சான்றிதழ் பெற்றுத்தருவதாக கூறி, மொரிஷியசில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும், கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த மாதம் வாசன் ஹெல்த் கேர் லிமிடெட் நிறுவனம் ரூ.2,262 கோடி அளவில் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதேபோல் அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கும் விளக்கம் கோரி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்நிறுவனத்தின் நிர்வாக குழுவில் கார்த்தி சிதம்பரம் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், சென்னை நுங்கம்பாக்கம் உள்ளிட்ட 14 இடங்களில் மே 16ம் தேதி காலை 6 மணியளவில் 14 பேர் கொண்ட டெல்லி சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பின்னர் அவர் ஆஜராக சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பினர்.
கார்த்தி சிதம்பரம் ஆஜராகாததால், அவரை விசாரணைக்கு ஆஜராக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய துறைகள் கடிதங்களை அனுப்பியது.
இந்த கடிதங்களை பரிசீலித்த மத்திய அரசு, தேடப்படும் குற்றவாளியாக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்தது. இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும், கார்த்தி சிதம்பரம் குறித்து லுக் அவுட் சர்குலர் அனுப்பியது.
இந்த நிலையில், தன்னை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த மத்திய அரசின் உத்தரவு மற்றும் தமக்கு பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் சுற்றறிக்கையை திரும்பப் பெறவும் கார்த்தி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது விஜய் மல்லையா போல் வெளிநாட்டுக்கு தப்பிவிடக் கூடாது என்ற நோக்கிலேயே கார்த்திக் சிதம்பரத்துக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
விஜய் மல்லையாவுடன் ஒப்பிட்டு பேசியதற்கு கார்த்திக் சிதம்பரம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து கார்த்திக் சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானால் லுக் அவுட் நோட்டீஸ் திரும்ப பெறப்படும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை நீதிபதி 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications