சென்னை அரும்பாக்கத்தில் செயின் பறித்த திருடன் கைது... வாகன சோதனையில் போலீசிடம் பிடிபட்டான்!
சென்னை அரும்பாக்கத்தில் செயின் பறித்த திருடன் கோயம்பேடு போலீசாரால் கைது செய்யப்பட்டான்.
சென்னை : சென்னை அரும்பாக்கத்தில் செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடைய திருடனை இன்று கோயம்பேடு அருகே வாகனசோதனையின் போது போலீஸார் கைது செய்தனர்.
கடந்த வாரம் சென்னையில் பல்வேறு செயின் பறிப்பு சம்பவங்கள் குறித்து ஒரே சமயத்தில் புகார் எழுந்தன. அதில் சென்னை அரும்பாக்கத்தில் நடந்து சென்ற பெண் ஒருவரின் செயினை பறிக்கும் போது, அவர் கீழே விழுந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

அதுகுறித்து போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இன்று சென்னை கோயம்பேடு அருகே போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக வந்த வண்டியை நிறுத்தினர்.
அப்போது நிற்காமல் சென்றதால், அந்த வண்டியில் வந்தவனை போலீஸார் துரத்திப்பிடித்தனர். இதில் அந்த நபரின் கை முறிந்தது. விசாரணையில், அவன் திருவல்லிக்கேணி அயோத்தியா நகரைச் சேர்ந்த அருண்குமார் என்பதும், பிரபல செயின் பறிப்பு திருடன் என்பதும் தெரியவந்தது.
மேலும், அவனிடம் இருந்து ஆறு சவரன் நகை மீட்கப்பட்டுள்ளது. இவன் கடந்த வாரம் அரும்பாக்கத்தில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவன் என்பதும் தெரியவந்துள்ளது. அருண்குமார் மீது இதுவரை 11 செயின் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications