ஜெ. சிகிச்சை பெற்ற பகுதியில் சிசிடிவி கேமரா நிறுத்தி வைப்பு- அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை நிறுத்தி வைத்திருந்தோம் என்று அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றிருந்த பகுதியில் சிசிடிவி கேமராவை துரதிருஷ்டவசமாக நிறுத்தி வைத்திருந்தோம் என்று அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.
ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 75 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு அது பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக பொதுமக்கள் சந்தேகம் எழுப்பியதை அடுத்து தமிழக அரசு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்தது. அந்த கமிஷனும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மறுத்துவர்கள், நெருக்கமானவர்கள், அதிகாரிகள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தியது.

என்னதான் ஆயிற்று
ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலாவை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஆணையம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அவர் 55 பக்கங்களை கொண்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். அதில் செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் டிசம்பர் 5-ஆம் தேதி வரை நடந்தது என்ன என்பது குறித்து விவரங்களை குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

சசிகலாவுக்கு சாதகமானது
இந்நிலையில் சசிகலா தனது பிரமாண பத்திரத்தில் கூறியதாக ஆங்கில நாளிதழ் ஒன்று சில கருத்துகளை வெளியிட்டது. அவற்றுள் 70 சதவீதம் உண்மை இல்லை என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்தது. மேலும் அவை சசிகலாவுக்கு சாதகமானவற்றையே செய்தியாக தந்துள்ளதாகவும் ஆணையம் தெரிவித்தது.

எப்படிப்பட்ட சிகிச்சை
ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தது குறித்து சென்னையில் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தோம். அப்பல்லோ மருத்துவர்கள், வெளிநாட்டு மருத்துவர்கள் என அனைவரும் அதிக கவனம் கொண்டு சிகிச்சை அளித்தோம்.

என்ன நடந்தது
ஜெயலலிதாவை யாரெல்லாம் சந்திக்க வேண்டும் என்பதை அவருடன் இருந்தவர்கள் கூறிய நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

சிசிடிவி கேமரா இல்லை
ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த பகுதியில் துரதிருஷ்டவசமாக சிசிடிவி கேமராக்களை நிறுத்தி வைத்தோம். அவர் சிகிச்சை பெறும் காட்சிகளை சம்பந்தமில்லாதவர்கள் பார்க்ககூடாது என்பதற்காக கேமராவை அணைத்து வைத்தோம். அவரது தனிமை மற்றும் பாதுகாப்பு கருதி மற்ற நோயாளிகள் இடம்மாற்றப்பட்டனர். எனவே ஜெ சிகிச்சை பெற்றதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகள் இல்லை என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications