சென்னையில் இன்று 104 டிகிரி வரை வெயில் பதிவாகலாம்... திகிலூட்டும் வானிலை எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், ஆனால், சென்னையில் மேகமூட்டம் அல்லது அதிகபட்சமாக 104 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கத்தரி வெயிலுக்கு முன்னதாகவே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகி விட்டது. மதிய நேரங்களில் தேவையில்லாமல் வீட்டை விட்டு மக்கள் வெளியேற வேண்டாம் என அரசே எச்சரிக்கும் அளவிற்கு வெயிலின் தாக்கம் இருந்தது.

ஆனால், கத்தரி தொடங்கிய சில தினங்களிலேயே ஆங்காங்கே மழை பெய்து பூமியைக் குளிர்வித்தது. அதற்கு பின்னர் வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்களை வாட்டி வதைக்க தொடங்கியது. பெரும்பாலான நகரங்களில் வெயிலின் அளவு 103 டிகிரியை தொட்டது.

வானிலை மையம் அறிவிப்பு...

வானிலை மையம் அறிவிப்பு...

இன்னும் சில தினங்களில் கத்தரி வெயில் முடிய இருக்கிறது. இந்நிலையில், இன்று சென்னையில் அதிகபட்சமாக வெயில் 104 டிகிரி அளவிற்கு அடிக்கலாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு...

மழைக்கு வாய்ப்பு...

மேலும், இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், "வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேர கணக்கீட்டின்படி எங்கும் மழை அளவு பதிவாகவில்லை. வடதமிழ்நாட்டில் ஓரிரு பகுதிகளிலும், தென்தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் அடுத்த 24 மணிநேரத்தில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேகமூட்டம்...

மேகமூட்டம்...

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாறாக அதிகபட்சமாக 104 டிகிரி வரை இன்று வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது.

பருவமழை...

பருவமழை...

இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை முடிவடைந்து ஓரிரு நாட்களில் பருவமழை தொடங்குவதற்கான சூழ்நிலை ஏற்படும். 31-ந் தேதி பருவமழை தொடங்க வேண்டும். ஆனால் மழையின் அளவையும், காற்றின் வேகத்தையும் அடிப்படையாக கொண்டு தான் பருவமழை தொடங்கும் நாட்களை குறிக்க முடிகிறது.

ஜூன் முதல் வாரத்தில்...

ஜூன் முதல் வாரத்தில்...

இதில் 4 நாட்கள் முன்பாகவோ, பின்பாகவோ பருவமழை தொடங்கலாம். ஜூன் முதல் வாரத்தில் தொடங்கலாம். இது குறித்த சரியான தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்றனர்.

சதம்...

சதம்...

தமிழகம், புதுவையில் நேற்று 13 இடங்களில் வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+