அன்புமணி ஏன் மங்கள்யான் போற பாதையை முறைச்சு பாக்குறாரு...
சென்னை: ஞாயிறு அதிகாலையில் சென்னை நகரம் முழுவதும் முக்கிய இடங்களில் போஸ்டர்களில் அன்புமணி இடம் பிடித்திருந்தார். பிரபல நாளிதழ்களில் முழு பக்க விளம்பரம் ஒரு பக்கமல்ல இரண்டு பக்கம். எல்லாமே ‘மாற்றம், முன்னேற்றம் அன்புமணி' என்ற வாசகம்தான். விளம்பர வாசகம் எல்லாம் சரிதான் ஆனால் அன்புமணிதான் எங்கே மேல் நோக்கி வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார்.
தூக்க கலக்கத்தில் எழுந்து போஸ்டரையோ, தினசரியையோ பார்த்தவர்கள் கொஞ்சம் மிரண்டுதான் போயிருப்பார்கள்.
ஏதோ திரில்லர் படம். அன்புமணி நடிக்கப்போகிறார் என நினைத்திருப்பார்கள் மக்கள். கீழே சின்ன எழுத்தில் anbumani4cm.com என்றிருந்தது. அப்புறம்தான் தெரிந்தது இது பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக புதிய இணையதள பக்கத்தை விளம்பரப்படுத்த ஒட்டப்பட்ட போஸ்டர் என்று. அதோடு நேற்றைய தினம் கோவையில் கொங்கு மண்டல மாநாடு நடத்தியது அதை விளம்பரப்படுத்தவும் இப்படி ஒரு விளம்பரத்தை கொடுத்திருந்தது பாட்டாளி மக்கள் கட்சி.

சட்டசபை தேர்தல்
2016ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தயாராகி வருகிறது. முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் இதற்காக ஆயத்தமாகி வருகிறார். அதன்ஓருபகுதியாக, anbumani4cm.com என்ற இணையதள பக்கத்தை தொடங்கியுள்ளார். அதில் "புதியதோர் தமிழகம் செய்வோம்" என்ற முழக்கத்தை முன்வைத்து பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார்.

மாற்றம் முன்னேற்றம்
பாட்டாளி மக்கள் கட்சியில் தொண்டர்களை சேர்க்கவும் அதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற வாசகங்களுடன் நாளிதழில் விளம்பரமாகவும், போஸ்டர்களாகவும் பாட்டாளி மக்கள் கட்சியினர் வெளியிட்டுள்ளனர்.

முழுமூச்சாய் களமிறங்கியது
சட்டசபை தேர்தலுக்கு இப்போதிருந்தே முழு மூச்சாய் களமிறங்கியுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, அன்புமணியை முன்னிறுத்தி, தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறது. இதற்காகவே போஸ்டர், இணையதளபக்கம், விளம்பரம் என ஆரம்பித்து விட்டது பாமக.
|
டுவிட்டரில் கமெண்ட்
விளம்பரம் எல்லாம் சரிதான் அதற்கு நம் டுவிட்டர்வாசிகள் அடித்த கமெண்டுகளை படிங்க... நீங்களும் சிரிங்க. வடிவேலு பாணியில் இவர் அடித்த கமெண்ட் குபீர் சிரிப்பை வரவழைக்காமல் போகாது.
|
தீபாவளி ரிலீசா?
ஏதோ சினிமா போஸ்டர் போலவே ஒட்டப்பட்டிருக்கிறது. நாளிதழ் விளம்பரமும் அப்படியே இருக்கவே குட்டீஸ்களின் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்ல முடியாமல் திணறிப் போனார்கள் அதற்குத்தான் இந்த கமெண்ட்.
|
ஓட்டு வருமா பாஸ்
பக்கத்திற்குப் பக்கம் விளம்பரம்... பார்க்கும் இடங்களில் எல்லாம் போஸ்டர் ஒட்டினால் ஓட்டு கிடைக்குமா என்று கேட்கிறார் ஒரு வலைஞர்.
|
மங்கள்யானை முறைக்கணுமா
விளம்பரத்தில் அன்புமணி கொடுத்திருக்கும் போஸ்தான் மக்களை கொஞ்சம் யோசிக்க வைத்திருக்கிறது,விடுவார்களா நம்மவர்கள் மங்கள்யான் வரைக்கும் போய்விட்டார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications