கூட்டணி ஆட்சி வராது... திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் - கருணாநிதி
சென்னை: தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராக உள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். தொங்கு சட்டசபை வராது என்றும் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியமைக்கும் என்றும் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
திராவிட கட்சிகளுக்கு தமிழகத்தில் மாற்று எதுவும் இல்லை என்றும் கூறிய கருணாநிதி, இளைஞர்களால் உருவாக்கப்பட்ட திமுக இன்றைக்கும் இளைஞர்களால் நிறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று பேட்டியளித்த கருணாநிதி, 93 வயதிலும் தனது வழக்கமான பாணியில் செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தில் வித்தியாசம்
தேர்தல் பிரச்சாரங்கள் அந்தக் காலத்தைவிட அதிக வித்தியாசம் கண்டுள்ளது. முன்பெல்லாம் ஒலிப்பெருக்கி மூலம் மட்டுமே பிரச்சாரம் செய்வோம். இப்போதெல்லாம் பிரச்சாரம் விஞ்ஞான வளர்ச்சி கண்டுள்ளது.

சமுதாய பணி
திராவிட இயக்கம் சமுதாய இயக்கமாக செயல்படுகிறது. எங்கள் சமுதாயப் பணி தொடர்ந்து கொண்டே இருக்கும். அரசியல் மூலமாக சமுதாயப் பணி ஆற்றவே தயாராக இருக்கிறோம். எனவே திராவிட ஆட்சி மீது தமிழக மக்களுக்கு அலுப்பு ஏற்படாது.

திமுகவின் மது கொள்கை
திமுகவின் மதுகொள்கை குறித்து முதல்வர் ஜெயலலிதாவின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, "சொன்ன சொல்லில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை திமுக நிரூபித்துக் காட்டியிருக்கிறது. 1971-ல் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டபோதே இது தற்காலிகமானதே என்று கூறினேன்.

மது ஆலைகள் மூடப்படும்
அதேபோல் 1974ல் மீண்டும் மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது. திமுகவினர் மதுஆலைகளை நடத்துவதாகக் கூறுவது கற்பனை குற்றச்சாட்டு. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து மது ஆலைகளும் மூடப்படும் என்றார். எதிர்கட்சிக்காரர்கள் குற்றம் சாட்டுவது போல திமுகவினர் மது ஆலைகள் நடத்தினால் அவைகளும் மூடப்படும்

தமிழகத்தில் மாற்றம் வரும்
தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். திமுகவிற்கு வாக்களிக்க தயாராகி விட்டனர். திராவிட கட்சிகளுக்கு மாற்று எதுவும் கிடையாது. நாங்கள்தான் மாற்று என்று கூறும் மாற்று அணியை சவாலாக கருதவில்லை.

தனித்து ஆட்சி அமைப்போம்
கூட்டணி ஆட்சி அமைக்கவேண்டிய அவசியம் ஏற்படாது. தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெற்றிபெற்று தனித்து ஆட்சி அமைக்கும்.
மக்களின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தார் .

ஊழல்வாதி ஜெயலலிதா
காங்கிரஸ் - திமுகவை ஊழல் கூட்டணி என ஜெயலலிதா விமர்சித்துள்ளது தொடர்பான கேள்விக்கு, பதிலளித்த கருணாநிதி ''ஒரு ஊழல்வாதி எப்படி ஊழல் குற்றச்சாட்டு கூறமுடியும்'' என கேள்வி எழுப்பினார்.

இலவசங்களில் வேறுபாடு
இலவசங்களை திமுக அளிப்பதற்கும், அதிமுக அளிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. திமுக இலவசங்களை இலவசங்களாக மட்டுமே அளிக்கிறது. அதிமுக தங்கள் பிழைப்பை நடத்துவதற்காக இலவசங்களை அளிக்கிறது என கருணாநிதி கூறினார்.

இளைஞர்கள் நிறைந்த கட்சி
இளைஞர்களிடையே திமுக மீது நம்பிக்கை இல்லை என்று கூறுவது பரப்புரையல்ல... அது பசப்புரை என்று கூறினார்.
இளைஞர் அணியால் உருவானதுதான் திமுக. திமுகவில் இன்றைக்கும் இளைஞர்கள் நிறைந்துள்ளனர். இளைஞர்களிடையே இன்றைக்கும் திமுகவிற்கு வரவேற்பு உள்ளது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications