இந்து நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள்... நிறுவனத்தின் தலைவர் என் ராம்.. ஆசிரியர் ரவி!

அவரது சகோதரர் என் ரவி மீண்டும் முதன்மை ஆசிரியராகியுள்ளார். இந்து ஆசிரியராக மாலினி பார்த்தசாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை முதன்மை ஆசிரியராக இருந்த சித்தார்த் வரதராஜன் மற்றும் நிறுவனத்தின் சிஇஓ அருண் ஆனந்த் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
'நிறுவனத்தின் நீண்ட கால பாரம்பர்யத்துக்கு பாதிப்பு ஏற்படும் விஷயங்கள் தொடர்ந்ததால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது,' என ராம் விளக்கமளித்திருக்கிறார்!
தி இந்து ஆங்கில நாளிதழ் மற்றும் கஸ்தூரி அன்ட் சன்ஸில் மட்டுமே இந்த மாற்றங்கள் என்றும், நிறுவனத்தின் பிற நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் இப்போது உள்ள நிலை தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
1991 முதல் 2003 வரை இந்துவின் ஆசிரியராக இருந்தவர் என் ரவி என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்குப் பின் 2003லிருந்து 2012 வரை முதன்மை ஆசிரியராகப் பதவி வகித்தார் என் ராம்.
2011-ம் ஆண்டு கஸ்தூரி அண்ட் சன்ஸ் இயக்குநர்கள் குழுவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் பதிப்பாளர் என் முரளி மற்றும் நிர்வாக ஆசிரியராக இருந்த மாலினி பார்த்தசாரதி போன்றோரின் ராஜிநாமாவைத் தொடர்ந்து, கஸ்தூரி குடும்பத்துக்கு வெளியிலிருந்து முதல் முறையாக ஆசிரியராக சித்தார்த் வரதராஜனை 2012-ல் நியமித்தார் என் ராம்.
மதிப்பீடுகளைச் சிதைத்தார் சித்தார்த்
ஆனால் ஆசிரியராக சித்தார்த் வரதராஜனின் செயல்பாடுகள் மற்றும் முடிவுகள் இந்துவின் பாரம்பரிய மதிப்பீடுகளை குறுகிய காலத்தில் சிதைத்துவிட்டதாகவும், அதை மீட்டு மீண்டும் இந்துவை அதன் உயர்ந்த பாரம்பர்ய மதிப்பில் வைக்கவே இந்த முடிவுகள் என்றும் என் ராம் தெரிவித்துள்ளார்.

சி இ ஓ வாக இருந்த அருண் ஆனந்த்தால், தொழில் முறை உறவுகள் பாதிக்கப்பட்டதாகவும் என் ராம் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த மாற்றங்கள் மூலம் மீண்டும் இந்து நாளிதழ் முழுக்க முழுக்க கஸ்தூரி குடும்பத்தின் ஆதிக்கத்துக்குள் வந்துள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications