Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை கிரானைட் முறைகேடு : 38 நிறுவனங்கள் மீது மேலும் 2 குற்றப்பத்திரிக்கை தாக்கல்

மேலூர் கிரானைட் முறைகேடு வழக்கில் மேலும் 2 குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

மேலூர் : விதிகளை மீறி கிரானைட் கற்களை வெட்டி எடுத்த விவகாரத்தில் பிஆர்பி, எம்எஸ் கிரானைட் நிறுவனங்கள் மீது மேலும் 2 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள.

மேலூர் கிரானைட் வழக்கில் ஏற்கனவே 74 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 2 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Chargesheet filed in illegal Granite mining case at Melur court

மேலூர் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரிக்கை 697 பக்கங்களை கொண்டுள்ளது. பிஆர்பி கிரானைட் நிறுவனம் மேலூர், கீழையூர் பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள அளவை விட கூடுதலாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்று வழக்கு தொடரப்பட்டது.

கண்மாய், நீர்பிடிப்பு பகுதிகளை சேதப்படுத்தி அரசுக்கு ரூ. 718.36 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக 38 கிரானைட் நிறுவனங்கள் மீது பொதுப்பணித்துறை புகார் அளித்தது. இந்த வழக்கின் விசாரணையை தனிப்படை போலீசார் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 75-வது குற்றப்பத்திரிக்கையை மேலூர் நடுவர் நீதிமன்றத்தில் தனிப்படை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே 70 வழக்குகளில் சுமார் 34 ஆயிரம் பக்கங்கள் கொண்ட தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+