பெண்களை ஏமாற்றி தகாத உறவு வைத்த போலீஸ் அதிகாரி.. அரை நிர்வாண கோலத்தில் சிறை பிடித்த பொதுமக்கள்!

பெண்களை ஆசைவார்த்தைகூறி அவர்களுடன் தகாத உறவு வைத்து வந்த தலைமை காவலரை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பெண்களை ஏமாற்றி தகாத உறவு வைத்த போலீஸ் அதிகாரி-வீடியோ

    திருநெல்வேலி: புகார் கொடுக்க வரும் பெண்களிடம் ஆசைவார்த்தை கூறி தகாத உறவில் ஈடுபட்டு வந்த தலைமை காவலரை பொதுமக்கள் அரைநிர்வாணத்துடன் போலீசில் ஒப்படைத்தனர்.

    திருநெல்வேலி மாவட்டம் தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாவூர்சத்திரம் சீர்மிகு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் அதிகாரி நடராஜன்.

     Cheating Police handed over the police Station to cheating women Near Nellai

    இவர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்க வரும் பெண்களிடம் செல்போன் நம்பரை வாங்கி கொண்டு இரவினில் உங்கள் பிரச்சனைகளை நான் நிவர்த்தி செய்து தருகிறேன் அதற்கு எனக்கு குறிப்பிட்ட தொகை பணம் வேண்டும் இல்லையெனில் இரவினில் என்னுடன் தங்க நீ வேண்டும் எனக் கூறி பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி தனது ஓய்வு அறைக்கு வரச்சொல்லி தகாத உறவில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

    கடந்த 2 ஆண்டுகளாக இந்த சம்பவத்தால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில், நேற்றிரவு காவலர் இரவில் ஓர் பெண்ணை அழைத்து வீட்டிற்கு வந்துள்ளார். ஏற்கனவே கோபத்தில் இருந்த மக்களுக்கு இதனை கண்டதும் ஆத்திரம் அதிகமாகி விட்டது. சிறிது நேரத்திற்கெல்லாம் நடராஜன் வீட்டு முன் திரண்டு விட்டனர். பின்னர் அரை நிர்வாணமாக இருந்த நடராஜன் உடன் இருந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

    ஆனால் சம்பந்தப்பட்ட காவலர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மீண்டும் இதே காவல் நிலையத்தில் நடராஜன் பணிபுரிந்தால் சாலை மறியல் மற்றும் தொடர் போராட்டங்களையும் நடத்தப் போவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+