ஷகீலா வயசு 35... அஜீத் வயசு 53.. இது எப்படி இருக்கு??
சென்னை: மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு இணையதளத்தை (http://how-old.net/) அறிமுகப்படுத்தியுள்ளது. செம ஜாலியாக இருக்கிறது இந்த தளம். அதாவது நமது புகைப்படத்தைப் போட்டால் அது வயதைச் சொல்கிறது.
நமது உண்மையான வயதை அது சரியாக சொல்ல மாட்டேன் என்கிறது. சற்று கூடுதலாகவோ அல்லது நிறைய குறைவாகவோ சொல்லி கலகலப்பூட்டுகிறது.
ஆனால் ஒரு விஷயம், இதை பல்லி, பாச்சா படத்தைப் போட்டு ஏமாத்த முடியாதுங்க, ரொம்ப உஷாரா இருக்கு

மைக்ரோசாப்ட்டின் வயது சொல்லி
வயதைச் சொல்லும் இந்த இணையதளம் படு வேகமாக பிரபலமாகி வருகிறது. பலரும் இதில் பலவிதமான படங்களைப் போட்டு வயதைச் சரிபார்த்து சிரித்து மகிழ்கின்றனர்.

விவஸ்தையே இல்லை
தங்களது படங்கள்தான் என்றில்லாமல் விதம் விதமான புகைப்படங்களைப் போட்டுப் பார்த்து அதில் வரும் தாறுமாறான வயதைப் பார்த்து சிலாகித்து சிரிக்கின்றனர்.

ரஜினி வயசைப் பாருங்க
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வயது 60ஐத் தாண்டி ரொம்ப வருடமாயிற்று. ஆனால் இந்தத் தளமோ அவரை 34 வயதுக்காரராக காட்டுகிறது...!

சின்னப் பசங்க.. கமல்
கமல்ஹாசன் 60 வயதைத் தொட்டு விட்டார். ஆனால் இந்த இணையதளமோ அவரை 38 வயதுக்காரராக காட்டுகிறது.

ஷகீலா வயசு 35
கவர்ச்சி நடிகை ஷகீலாவின் உண்மையான வயது 41 ஆகும். ஆனால் இதில் 35 என்று காட்டுகிறது இந்த தளத்தின் ஆப்.

விஜய் 35
40 வயதைத் தொட்டு விட்டார் இளையதளபதி விஜய். ஆனால் இந்தத் தளம் அவரை 35 வயதுக்காரராக காட்டி மகிழ்கிறது.

ஓ மை காட்!
ஆனால் அஜீத்துக்கு இது சொல்லும் வயதுதான் காமெடியானது. அதாவது 53 வயது என்று அவரது நெற்றியில் ஒட்டிக் காட்டுகிறது. தல ரசிகர்கள் மைக்ரோசாப்ட் ஒழிக என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஐஸுக்கு வயசு 30
ஐஸ்வர்யா ராய்க்கு 18 வயது என்று சொன்னால் கூட அனைவரும் நம்பி விடுவார்கள். இந்த இணையதளோ 30 என்று சொல்கிறது. பட், அவர் அதைத் தாண்டி நிறைய வருடங்களாகிறது.

வாவ் பிரியா...!
பிரியா ஆனந்த் படத்தைப் போட்டுப் பார்த்தபோது.. வாட் ஏ ஆச்சரியம்.. சரியான வயதைக் காட்டி குஷிப்படுத்தியது இந்த இணையதளம்...!

ரொம்ப உஷாருப்பா நீ
சரி எதைப் போட்டாலும் வயசைச் சொல்லுதே என்று ஒரு கரடி பொம்மையைப் போட்டுப் பார்த்தோம்.. என்ன ஆச்சரியம்.. ஒரு முகம் தெரியலடா டேய்.. என்று நம்மை முறைத்துப் பார்த்தது இந்த ஆப்!
பரவாயில்லை, பயபுள்ள உஷாராத்தான் இருக்குது!
-
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா? -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
நீட் கோச்சிங் கொடுக்கும் பள்ளிக்கு.. ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? வெளியான ஷாக் தகவல்! -
ரூ.500+ கோடிக்கு சொத்து இருக்கு.. ஆனாலும் ரூ.67,000க்கு TVS XL வாங்கிய விஜய்.. என்ன காரணம் தெரியுமா -
Vijay: 5 ஆண்டுகளில் விஜயின் வருமானம் எவ்வளவு? 2022ல் மட்டும் 237 கோடியா? வாயை பிளக்க வைத்த அபிடவிட் விவரம்! -
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
மீண்டும் மீண்டுமா? விஜய்யை பார்க்க டிரான்ஸ்ஃபார்மர் மீது ஏற முயன்ற தவெகவினர்! அசம்பாவிதம் தவிர்ப்பு -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
விஜய்யை எதிர்த்து.. பெரம்பூரில் களமிறங்கும் பாமகவின் திலகபாமா! அன்புமணியின் மூவ்! -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications