தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே வாகனச் சோதனை தீவிரம்
நெல்லை: தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதையடுத்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு, கேரளா, உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை அடுத்து பல்வேறு இடங்களில் வாகனச் சோதனை நடத்தினர். சோதனையின் போது வீடியோ பதிவும் செய்தனர்.

அதே நேரத்தில் விதிமுறை மீறல்களும் பல இடங்களில் நடந்துள்ளன. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் கதவை பூட்டிக்கொண்டு மாவட்ட சமூக அலுவலர் லலிதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நிலையில் சமூக நலத்துறை அதிகாரிகள் பயனாளிகளை வரவழைத்து அவசர அவசரமாக நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதே போல் நெல்லை மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் நகர்மன்றக் கூட்டம் அவசர அவசரமாக நடத்தப்பட்டது. அப்போது செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்காமல் நலத்திட்டங்களை பெற வந்தவர்களிடம் கையெழுத்து வாங்கி பொருள்களை வீடுகளுக்கே அனுப்பி விடுவதாக உறுதியளித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications