முதலில் கண்ணாடியெல்லாம் உடைஞ்சது.. இப்போ குழாயெல்லாம் உடையுது.. வெல்கம் டூ சென்னை ஏர்போர்ட்!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் குழாய் உடைந்ததால் தண்ணீர் இன்றி பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களுக்கு விமான நிலையத்தில் உள்ள கீழ் நிலை தொட்டியில் இருந்து குழாய்கள் மூலமாக தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று மதியம் திடீரென தொட்டியில் இருந்து விமான நிலையத்துக்கு செல்லும் தண்ணீர் குழாய் உடைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் விமான நிலையத்துக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் விமான நிலையத்தில் உள்ள கழிவறை மற்றும் பிற பயன்பாட்டுக்கு தண்ணீர் இன்றி பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்களுடன் விரைந்து வந்து, குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை சீர்செய்தனர். பின்னர் தண்ணீர் வினியோகம் சீரானது. இதனால் விமான நிலையத்தில் தண்ணீர் இன்றி 1 மணி நேரம் பயணிகள் அவதி அடைந்தனர்.
இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, "தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டது. எங்கு உடைப்பு ஏற்பட்டது என்பது கண்டறியப்பட்டு உடனடியாக அது சரி செய்யப்பட்டது" என்றனர். ஏற்கனவே விமான நிலைய கண்ணாடிக் கதவுகள் தொடர்ந்து உடைந்து விழுகின்ற நிலையில் தற்போது தண்ணீருக்கும் பிரச்சினை ஏற்பட்ட நிகழ்வு பயணிகளை அதிர்வடையச் செய்துள்ளது.
-
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்?












Click it and Unblock the Notifications