Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'சென்னைஸ் அமிர்தா' சர்ச்சைகள் பின்னணியில் யார்? தலைமை அதிகாரி பரபரப்பு பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'சென்னைஸ் அமிர்தாஸ்' குறித்து விகடன் வார இதழ் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் விளம்பரத்தில் கூறப்படுவதை போல அந்த கல்வி நிறுவனம் இல்லை என்ற தகவல் வெளியானது.

படிக்கும்போதே வேலை கிடைப்பதில்லை எனவும், சீட் குறைவாக இருப்பதை போல பொய் சொல்லி மாணவர் சேர்க்கை நடப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னைஸ் அமிர்தா தலைமைச் செயல் அலுவலர் ஆர். பூமிநாதன் அந்த இதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் செய்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.

8 வருடம் முன்பு

8 வருடம் முன்பு

பூமிநாதன் கூறியுள்ளதாவது: படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் 2008ல் இக்கல்வி நிலையத்தை துவங்கினேன்.

நல்ல கட்டமைப்பு

நல்ல கட்டமைப்பு

எங்கள் நிறுவனத்தில் உலக தரத்தில் உள்கட்டமைப்பு வசதி இருக்கிறது. எங்கள் நிறுவனத்தின் உள்கட்டமைப்பை நீங்கள் எந்த கல்வி நிறுவனத்துடனும் ஒப்பிட முடியாது.

பங்குதாரர்கள்

பங்குதாரர்கள்

2008ல் மூன்று பேர் சேர்ந்து அமிர்தா கல்வி நிலையங்களை சென்னை, திருச்சி மற்றும் கோவையில் துவக்கினோம். சென்னை கல்வி நிலையத்தை நான் நிர்வகிப்பது என்றும், திருச்சி, கோவை நிறுவனத்தை பிற பங்குதாரர்கள் நிர்வகிப்பதென்றும் முடிவானது.

பங்குதாரர் சதி

பங்குதாரர் சதி

ஆனால், சில ஆண்டுகளில் எங்களுக்குள் சில முரண்பாடுகள் வந்தன. அதனால், நான் அவர்களிடமிருந்து பிரிந்து, நீதிமன்றம் சென்று சட்டப்பூர்வமாக நிறுவனத்தையும் பிரித்துவிட்டேன். இப்போது சென்னை நிர்வாகம் முழுக்க முழுக்க என் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. சென்னைஸ் அமிர்தா'வின் வளர்ச்சியை பார்த்து என் முன்னாள் பங்குதாரர்களுக்கு என் மேல் பொறாமை. அதனால்தான், இது போன்ற வதந்திகளை பரப்பி, என் நிறுவனத்தை அழிக்க பார்க்கிறார்கள்.

மாணவர் சேர்க்கை

மாணவர் சேர்க்கை

சில மாணவர்களை அவர்கள் கைக்குள் போட்டுக்கொண்டு, என் நிறுவனத்திற்கு எதிராக இதுபோல் செய்திகளைப் பரப்புகிறார்கள். குறிப்பாக, மாணவர்கள் சேர்க்கை காலத்தில்தான் இதுபோன்ற செயல்களில் இறங்குகிறார்கள்.

பயிற்சிக்கு அனுப்புகிறோம்

பயிற்சிக்கு அனுப்புகிறோம்

நாங்கள் எல்லா மாணவர்களையும் பயிற்சிக்கு அனுப்புகிறோம். அதற்காக மட்டும் நூற்றுக்கணக்காண ஊழியர்கள் இயங்குகிறார்கள். நாங்கள் பயிற்சிக்கு அனுப்பியதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன.

படிப்பை கைவிட காரணம்

படிப்பை கைவிட காரணம்

எல்லா கல்வி நிறுவனங்களிலும் இடையில் கல்வியை நிறுத்துவோர் இருக்கதான் செய்வார்கள். அதுபோல் எங்கள் நிறுவனத்திலும் 10 சதவீதம் வரை இருக்கிறது. அதற்கு மாணவர்களின் குடும்பச்சூழல், தனிப்பட்ட பழக்க வழக்கங்களே காரணம். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கும் யாரும் பள்ளிக் காலத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அல்ல. பள்ளிக் கல்வியில் சோபிக்க முடியாதவர்கள்தான், இந்த பாடத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களுக்கென்று சில பிரச்னைகள் இருக்கும்.

மாணவர்களே தூதர்கள்

மாணவர்களே தூதர்கள்

எங்களிடம் உள்ள பொருளாதார வலிமைக்கு யாரை வேண்டுமானாலும், எங்கள் விளம்பரத்தில் நடிக்க வைக்க முடியும். நாங்கள்தான் ராதிகா வேண்டாமென்று முடிவு செய்தோம். எங்கள் மாணவர்களே இப்போது எங்கள் விளம்பரத் தூதர்கள். இப்போது எங்கள் எல்லா விளம்பரங்களிலும் எங்கள் மாணவர்கள் மட்டும்தான் நடிக்கிறார்கள்.

சம்பாதிக்கவில்லை

சம்பாதிக்கவில்லை

விளம்பரம்தான் எங்கள் பலம். இப்போது நாங்கள் அதிகமாக விளம்பரம் செய்து, எங்கள் பிராண்டிற்கென்று ஒரு இமேஜை உருவாக்குகிறோம். கடந்த மூன்று ஆண்டுகளாக, நாங்கள் எதுவும் சம்பாதிக்கவில்லை. வரும் நாட்களில், அனைத்து மாவட்டங்களிலும் எங்கள் கல்வி நிலையத்தை திறக்கும்போது, இதை ஈடுகட்டுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மாணவர்கள் கருத்து

மாணவர்கள் கருத்து

இதன்பிறகு மாணவர்களுடன் இதழ் நிருபரை கலந்துரையாட ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது மாணவர்கள், அந்த கல்வி நிறுவனம் சிறப்பாக இயங்குவதாகவும், வேலை கிடைப்பதாகவும் விளம்பரங்களில் வருவதை போலவே கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+