சென்னை: போதையில் போர்சே காரை ஓட்டிய மாணவரால் விபத்து.. ஒருவர் பலி, 11 பேர் காயம் #porsche
சென்னை: சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இன்று அதிகாலை குடிபோதையில் தாறுமாறாக ஓடிய போர்சே சொகுசு கார், சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த ஆட்டோக்கள் மீது மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பலியானார். 12 ஆட்டோக்கள் சேதமடைந்தன. ஆட்டோக்களில் உறங்கிக் கொண்டிருந்த 11 டிரைவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தி.நகரைச் சேர்ந்த விகாஷ் மற்றும் அவரது நண்பரும் குடிபோதையில் தாறுமாறாக போர்சே காரை ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்தியுள்ளனர். இதில் விகாஷ் என்பவர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் விஜய் ஆனந்த் என்பவரின் மகன் என்றும் அவர் தான் காரை ஓட்டிச்சென்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
விகாஷின் நண்பர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் சகோதரர் என கூறப்படுகிறது. இருவரும் நேற்று சேப்பாக்கத்தில் நடந்த தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியின் இறுதிப் போட்டியின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் குடிபோதையில் சொகுசு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியுள்ளனர்.
குடிபோதையில் போர்சே சொகுசு காரை ஓட்டிச் சென்று சாலையோர தடுப்பில் மோதிய வேகத்தில் அங்கு நின்றுக்கொண்டிருந்த ஆட்டோக்கள் மீது மோதியதில் 12 ஆட்டோக்கள் அப்பளம் போல நொறுங்கியது. சொகுசுக்காரும் பயங்கரமாக சேதமடைந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகம் மற்றும் வரதன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வரதனது நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மற்றவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காரை ஓட்டிய விகாஷை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரது நண்பரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விபத்து தொடர்பாக அடையார் போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications