வாடிக்கையாளர்களிடம் ரூ. 75 கோடி மோசடி செய்த தமிழகத்தின் பிரபல ஜூவல்லரி!
Recommended Video

சென்னை: நகைச் சீட்டுகள் மூலம் சுமார் ரூ.75 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பதை தமிழகத்தின் பிரபல நகைக் கடை உரிமையாளர்கள் ஒப்புக் கெண்டாக ஆங்கில ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
சென்னை, ஓசூர் உள்ளிட்ட 7 இடங்களில் இயங்கி வந்தது அந்த பிரபல நான்கு எழுத்து நகைக் கடை. 1990களில் டிவி சேனல்களில் இந்த நகைக்கடை விளம்பரம்தான் திரும்ப திரும்ப காட்டப்பட்டது.
ஆனால், இங்கு நகைச் சீட்டுக் கட்டியவர்களுக்கு நகையை கொடுக்காமல் அலைக்கழிக்க ஆரம்பித்தது நகைககடை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

பரபரப்பில் வாடிக்கையாளர்கள்
சுமார் ஆயிரம் வாடிக்கையாளர்கள் காவல் நிலையத்தில் வரிசையாக புகார்களை அளித்தனர். இதையடுத்து திடீரென கடந்த மாதம் நகைக் கடைகள் மூடப்பட்டன.
சட்டம்-1997ன் கீழ், 406, 420 உள்ளிட்ட பிரிவுகளில், அந்த நகைக் கடை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கை விசாரித்தனர்.

சொத்துக்கள் உள்ளன
நகைக்கடை உரிமையாளர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், ஏராளமான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையின் முக்கிய இடங்களில் இருக்கும் நகைக் கடைகள், அம்பத்தூரில் பள்ளிக் கட்டடம், கீழ்பாக்கத்தில் இரண்டு வீடுகள் என நகைக்கடை உரிமையாளர்கள் பல சொத்துக்களை வாங்கியிருந்தது அப்போது தெரிய வந்தது.

சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை
இந்த சொத்துக்களை நீதிமன்றம் மூலம் விற்பனை செய்து, அதில் வரும் பணத்தைக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை திரும்ப செலுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

பணத்தை திருப்பி தர சம்மதம்
இந்த நிலையில், சுமார் 21 ஆயிரம் பேரிடம் சீட்டு திட்டத்தின் கீழ் பணம் பெற்று ரூ.75 கோடி அளவுக்கு ஏமாற்றியிருப்பதை உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வழக்கிலிருந்து தப்பிக்க தங்களது சொத்துக்களை விற்று பணத்தை திருப்பித் தரவும் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சுமார் 77 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட இந்த நகைக் கடை நிதி நெருக்கடியில் சிக்கி இந்த நிலைக்கு வந்ததாக கூறப்படுகிறது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications