மவுலிவாக்கம் விபத்து ரியல் எஸ்டேட் துறையின் கருப்புப் பக்கம்... அறிக்கையில் சாடும் ரகுபதி கமிஷன்...
சென்னை : சென்னை மவுலிவாக்கம் கட்டட விபத்து குறித்த விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. விபத்துக்குள்ளான கட்டடத்தின் அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்தை இடிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் தரைமட்டமானதில் 65 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில், மவுலிவாக்கம் கட்டிட விபத்து பற்றி விசாரிக்கவும், வருங்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் முன்னாள் நீதிபதி ரெகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
தமிழக அரசு அமைத்த இந்த விசாரணை கமிஷனின் 225 பக்கங்கள் கொண்ட அறிக்கை சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் மவுலிவாக்கம் கட்டிட விபத்துக்கு விதிமுறை மீறல் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரெகுபதி கமிஷன் அறிக்கையின் 10 முக்கிய அம்சங்கள்...
* மவுலிவாக்கம் சம்பவம் ரியல் எஸ்டேட் துறையின் கருப்புப் பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டும் சிறந்த உதாரணம். ரியல் எஸ்டேட் பிசினஸில் பணம் மட்டுமே பிரதானமாக இருக்கிறது. இங்கு மனித உயிர்களுக்கு மதிப்பில்லை.
* மவுலிவாக்கம் கட்டிடத்தை கட்டும் பணியில் விதிமுறைகள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.
* கட்டுமானப் பணியை மேற்கொண்ட நிறுவனத்தினர் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் (சிஎம்டிஏ) பெறப்பட்ட திட்ட அனுமதிக்கு மாறாக விதிகளை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து கட்டிடம் கட்டியுள்ளனர்.
* ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்ட வரைப்படத்தில் 46 தூண்கள் இடம் பெற்றதற்கு மாறாக 37 தூண்களை மட்டுமே அமைத்து உள்ளனர்.
* சென்னை நகரிலும், நகரைச் சுற்றியும் மேற்கொள்ளப்பட்டு பெரும் கட்டிட வேலைகளை கண்காணிக்க உடனடியாக ஒரு குழு அமைத்து சோதனை மேற்கொள்வது நல்லது. இதன் மூலம் மவுலிவாக்கம் போன்ற துயரச் சம்பவத்தை தவிர்க்கலாம்.
* விசாரணை கமிஷன் பார்வையில், மவுலிவாக்கம் விபத்துக்கு முழு முதற் காரணமாக, சிருஷ்டி ஹவுஸிங் லிமிடட் நிர்வாக இயக்குநர் மனோகரன், இயக்குநர்கள் முத்துகாமாட்சி, பாலகுருசாமி, பொறியாளர் எஸ்.வெங்கடசுப்ரமணியம், கட்டிட வரைகலை ஆலோசகர் விஜய் பர்கோத்ரா, கட்டிட மேற்பார்வையாளர்கள் கார்த்திக், சங்கர் ராமகிருஷ்ணன் ஆகிய 6 பேருமே ஆவர்.
* விபத்துக்குள்ளான கட்டிடத்தில் வீடு முன்பதிவு செய்திருந்த நபர்களுக்கும், கட்டிடம் இடிந்து விழுந்தபோது அருகில் இருந்த சில வீடுகளும் பாதிப்புக்குள்ளாகின. அவற்றில் வசித்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை நிர்ணயிக்க ஒரு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட வேண்டும்.
* ஒரு பெருங் கட்டிடம் கட்டும் போது கட்டுமான நிறுவனம், வங்கி, வாடிக்கையாளர்கள் ஆகிய மூவரையும் உள்ளடக்கி மும்முனை பொறுப்பை ஏற்படுத்தும் வகையில் இன்சூரன்ஸ் மேற்கொள்வது தொடர்பான சட்டதிருத்தம் செய்வது அவசியம்.
* பெருங் கட்டுமான திட்டத்தை மேற்கொள்ளும் கட்டுமான நிறுவனம் குறிப்பிட்ட அளவிலான தொகையை 10 ஆண்டுகளுக்கு நிரந்த வைப்பு நிதியாக வங்கியில் செலுத்த வழிவகை செய்ய வேண்டும்.
* சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திலும், தொழில்நுட்ப அதிகாரி, சட்ட வல்லுநர், மண் பரிசோதகர், அடித்தளம் அமைப்பு வடிவாளர், கட்டுமான பொறியாளர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். நகரின் பெரும் கட்டுமான திட்டங்கள் அனைத்தையும் அவர்கள் மேற்பார்வை செய்வர்.
இவ்வாறு ரகுபதி கமிஷன் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications