நாட்டிலேயே நம்ம சென்னை மாநகர பேருந்துகளில் தான் கூட்டம் அதிகமாம்!
சென்னை: நாட்டிலேயே சென்னையில் ஓடும் பேருந்துகளில் தான் கூட்டம் அதிகமாக உள்ளது என்று மத்திய போக்குவரத்து அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர பேருந்துகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவது புதிய விஷயம் அல்ல. ஆனால் நாட்டிலேயே சென்னையில் ஓடும் பேருந்துகளில் தான் கூட்டம் அதிகமாக உள்ளது என்று மத்திய போக்குவரத்து அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
2014-2015ம் ஆண்டில் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் 2.54 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 2.22 சதவீதம் அதிகம் ஆகும். 2014-2015ம் ஆண்டில் நாட்டிலேயே சென்னை மாநகர பேருந்துகள் தான் தினமும் கூடுதல் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளன.
அந்த ஆண்டில் சென்னையில் நாள் ஒன்றுக்கு ஒரு பேருந்தில் மட்டும் 1, 310 பேர் பயணம் செய்துள்ளனர். நாட்டிலேயே மிசோரம் மாநில போக்குவரத்து கழக பேருந்துகளில் தான் மிகவும் குறைவானோர் பயணித்துள்ளனர்.
சென்னை மாநகர பேருந்துகளில் 56.85 சதவீத பேருந்துகள் மிகவும் பழையனவாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய பேருந்துகளுக்கு பதில் புதிய பேருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பேருந்துகளின் அளவை அதிகரிக்க முடியாது, அதே போன்று புதிய வழித்தடங்களையும் அறிமுகப்படுத்த முடியாது என சென்னை மாநகர போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications